திமுக கூட்டணியில் ராமதாஸ் அணி? விசிக ஒருபோதும் ஏற்காது.. நேரடியாக சொன்ன வன்னி அரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் பாமகவின் ராமதாஸ் அணியை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாஜக மற்றும் பாமக ஆகிய இரு கட்சிகள் இருக்கும் கூட்டணியில் விசிக இணையாது என்று கூறிவிட்டதாக தெரிவித்த வன்னி அரசு, பாமக தங்களின் கொள்கைகளுக்கு எதிரான கட்சி என்றும் கூறியுள்ளார்.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பாமக பஞ்சாயத்து உச்சத்திற்கு சென்றுள்ளது. ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல், பாமகவின் மாம்பழ சின்னத்தை முடக்கும் வரை செல்ல வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பு தீவிரமாக மோதி வருவதால், அவர்கள் இணைவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது.

PMK Rift

ராமதாஸ் ஆதரவாளர்களை ஏற்றுக் கொள்ள அன்புமணி விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனிடையே பாமக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன. அன்புமணி தரப்பில் அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை கிட்டத்தட்ட முடித்துள்ளது. ராமதாஸ் தரப்பை திமுக அணுகி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் திமுக கூட்டணியில் பாமக இணைந்தால், விசிக இடம்பெறாது என்று திருமாவளவன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதுதொடர்பாக விசிக நிர்வாகி வன்னி அரசு பேசுகையில், விசிக தற்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ளது. முன்னணி கட்சியாக மாற வேண்டுமென்றால், எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். அதற்கு இரட்டை இலக்கத்தில் இம்முறை போட்டியிட்டு வெல்ல வேண்டும்.

அதேபோல் பாஜக மற்றும் பாமக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது என்று திருமாவளவன் உறுதிபடுத்தி உள்ளார். பாமகவில் இருந்து எந்தவொரு அணி வருவதையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். பாமக சாதிய நச்சு உடைய கட்சி.. தனிப்பட்ட வகையில் அன்புமணி மீதோ, ராமதாஸ் மீதோ எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. எங்கள் கொள்கைக்கு எதிராக இருப்பதால் எதிர்க்கிறோம்.

விஜய்க்கு இளைஞர்களின் ஆதரவு இருப்பதாக காட்டப்படும் தோற்றமே போலியான விஷயமாக பார்க்கிறோம். தவெக இன்னும் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை. அப்படி இர்யுக்கும் போது விஜய்க்கு 25 சதவிகித வாக்குகள் இருப்பதாக கட்டமைத்து வருகிறார்கள். கரூர் சம்பவத்தின் போதே விஜய்யின் நடவடிக்கையை பார்த்தோம். சினிமா நடிகர் விஜய்யை பார்க்க ரசிகர்கள் வருகிறார்கள். தவெக தொண்டர்கள் யாரும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+