சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுதான் ஒரே "கோல்".. அவர் மட்டுமே ஜெயிக்க கூடாது.. விடாப்பிடியாக நிற்கும் பாமக நிர்வாகிகள்.. பின்னணி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் எங்கு திமுக வெற்றிபெற்றாலும் பிரச்சனையில்லை.. ஆனால் ஒரு தொகுதியில் மட்டும் அந்த கட்சி வெற்றிபெற்றுவிடவே கூடாது என்பதில் பாமக உறுதியாக இருக்கிறது.. அந்த தொகுதி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டியிடும் பண்ருட்டி தொகுதியாகும்!

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி இடம்பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் வேல்முருகன் 2 இடங்கள் கேட்ட நிலையில் ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டது.

திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் வேல்முருகன் பண்ரூட்டி தொகுதியில் களமிறங்கி உள்ளார். இவர் அந்த தொகுதியில் மிக தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.

பாமக

பாமக

பண்ருட்டி தொகுதியில் அதிமுக சார்பில், முன்னாள் எம்எல்ஏ சொரத்தூர் ராஜேந்திரன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் இங்கு போட்டியிடும் வேல்முருகனை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று பாமக குறியாக இருக்கிறது. யார் வேண்டுமானாலும் ஜெயிக்கட்டும், ஆனால் இவர் மட்டுமே ஜெயிக்கவே கூடாது என்பதில் பாமக மிக தீவிரமாக இருப்பதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.

நிலவரம்

நிலவரம்

பண்ருட்டியில் வேல்முருகன் மிகவும் வலிமையாக இருக்கிறார். அங்கு இருக்கும் வன்னியர் வாக்குகளும், வன்னியர் அல்லாத வாக்குகளும் இவருக்கு பெரிய அளவில் ஆதரவாக இருக்கும். முன்பு பாமகவில் இருந்தவர் என்பதால் பாமகவின் முன்னாள் வாக்குகளும் இவருக்கு செல்லும். 2001 முதல் 2011 வரை பாமக தலைமையில் 10 ஆண்டுகள் எம்எல்ஏவாக இவர் இருந்தார்.

வேல்முருகன்

வேல்முருகன்

வட மாவட்டங்களில் செல்வாக்குள்ள வேல்முருகன், பாமகவிற்கு மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளார். வன்னியர் வாக்குகளை திமுக பக்கம் திருப்பும் கேம் சேஞ்சராக வேல்முருகன் உருவெடுத்துள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக வேல்முருகன் வாக்கு சேகரித்தார். வடமாவட்டங்களில் லோக்சபா தேர்தலில் திமுக வெல்ல இவர் முக்கிய காரணமாக இருந்தார்.

வளர்ச்சி

வளர்ச்சி

வேல்முருகனின் வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக பாமகவிற்கு எதிராக திரும்பி உள்ளது. முக்கியமாக விசிகவிற்கு ஆதரவாக வேல்முருகன் ஆட்கள் பிரசாரம் செய்வதும் பாமகவிற்கு சிக்கலாக மாறியுள்ளது. விசிக வேட்பாளர்களுக்கு ஆதரவாக சில வன்னியர்கள் வாக்கு கைமாறவும் வேல்முருகன் முக்கிய காரணமாக மாறியுள்ளார்.

மேலும் உயரும்

மேலும் உயரும்

பாமகவி அடிமடியிலேயே இவர் கை வைக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் பண்ட்ருட்டி தொகுதியில் மட்டும் வேல்முருகன் வென்றுவிட்டால் அது பாமகவிற்கு மேலும் சிக்கலாக மாறும். வேல்முருகனுக்கு அது மேலும் வளர்ச்சியை கொடுக்கும். இதனால் இவருக்கு எதிராக பெரிய அணியை பாமக உள்ளே இறக்கி உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

 பணிகள்

பணிகள்

வேல்முருகனுக்கு எதிராக தேர்தல் வேலைகளை பார்க்க அதிக அளவில் நிர்வாகிகள் களமிறக்கப்பட்டுள்ளனராம். இங்கு அதிமுகதான் போட்டியிடுகிறது என்றாலும் பாமக.. இதை தங்கள் சொந்த தொகுதி போல நினைத்து வேலை பார்க்கிறது. பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் போக மற்ற தொகுதியில் உள்ள பல நிர்வாகிகள் இங்கு களமிறக்கப்பட்டுள்ளனர்.

Recommended Video

    வீர வாள்.. பண்ருட்டி தொகுதியில்.. வேல்முருகனுக்கு திமுக கொடுத்த இன்ப அதிர்ச்சி - வீடியோ
    பாமக வேலை

    பாமக வேலை

    பாமகவின் இந்த தீவிரமான தேர்தல் பணிகளால் வேல்முருகன் தரப்பும் ஆடிப்போய்தான் உள்ளது. ஈசியாக எல்லாம் வென்றுவிட முடியாது.. சூழ்நிலை இரண்டு தரப்புக்கும் ஆதர்வாக உள்ளது.. தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தினால்தான் பாமகவை சமாளிக்க முடியும் என்று வேல்முருகனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

    English summary
    PMK works very hard to defeat Tamilka Vazhvurimai Party's chief Velmurugan in the Panruti constituency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X