2 மகன்களும் தற்கொலைக்கு சம்மதிக்காததால் அனஸ்தீசியா கொடுத்து தூக்கிலிட்ட மருத்துவர்? ஷாக் தகவல்!
சென்னை: சென்னையில் கடன் பிரச்சனையால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட மருத்துவர், தமது 2 மகன்களும் தற்கொலை செய்துகொள்ள பயந்ததால் அவர்களுக்கு அனஸ்தீசியா கொடுத்து, அவர்களை தூக்கிலிட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரூ.5 கோடி கடன் தொல்லை காரணமாக சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணை மற்றும் தடயவியல் ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் பாலமுருகன் (52). இவரது மனைவி சுமதி (47) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 19 வயதில் ஜஸ்வந்த் குமார் மற்றும் 17 வயதில் லிங்கேஷ் குமார் என்று இரு மகன்கள் இருந்தனர்.
இந்த நிலையில் குடும்பத்தினர் 4 பேரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பெற்றோருடன் சேர்ந்து மகன்களும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து உடல்களை கைப்பற்றிய போலீசார், உடனடியாக பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மருத்துவர் பாலமுருகன் ரூ.5 கோடிக்கும் மேல் கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடன் கொடுத்த பலர் நெருக்கடி கொடுத்து வந்ததால், கடனில் இருந்து மீளமுடியாத சூழல் நிலவியதால், மனம் வெறுத்துப் போய் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. காவல்துறையின் விசாரணையில் மேலும் அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளன.
மருத்துவர் பாலமுருகனின் இரண்டு மகன்களும் இந்த தற்கொலை முடிவுக்கு பயந்ததால், அவர்களுக்கு அனஸ்தீசியா கொடுத்த மருத்துவர் பாலமுருகன், அவர்களை தூக்கிலிடச் செய்து, அதன் பிறகு தனது மனைவியுடன் விபரீத முடிவெடுத்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
2 மகன்களும் தற்கொலைக்கு ஒத்துழைக்காததால் மயக்க ஊசி செலுத்தி இரண்டு மகன்களையும் மருத்துவர் பாலமுருகன் தூக்கிலிட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடற்கூராய்வு அறிக்கை வந்தபிறகே இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
சென்னை மின்தடைக்கு முற்றுப்புள்ளி? கடலூர், நகையில் இருந்து பறந்து வந்த ஸ்பெஷல் டீம்.. குட்நியூஸ் -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை.. நாமக்கல் அருகே அதிர்ச்சி! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு












Click it and Unblock the Notifications