வசமாக சிக்கிய எடப்பாடி.. தடையை மீறியா போராடுறீங்க.. பாய்ந்த வழக்குகள்.. என்ன பிரிவுகள் தெரியுமா?
சென்னை: சென்னை வள்ளூவர் கோட்டத்தில் தடையை மீறி அதிமுக சார்பில் போராட்டம் நடத்தியது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்பட 750 அதிமுகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிமுகவில் உள்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையே ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக பிரச்சனை வெடித்தது. நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஓ பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார். இது செல்லாது என ஓ பன்னீர் செல்வம் தரப்பில் கூறப்படுகிறது.

எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி
இருப்பினும் ஓ பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியதால் அவர் வகித்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி ஆர்பி உதயக்குமாருக்கு, எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். மேலும் ஆர்பி உதயகுமாருக்கு சட்டசபையில் முன்வரிசையில் இடம் ஒதுக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்மீது முடிவு எடுக்கப்படவில்லை. ஆர்பி உதயகுமாருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்படவில்லை. மேலும் எதிர்க்கட்சி துணை தலைவராக அவர் அங்கீகரிக்கப்படவில்லை.

அதிமுக சபையில் இருந்து வெளியேற்றம்
இதனால் சட்டசபையில் அதிமுக உறுப்பினர்களின் இருக்கைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. ஓ பன்னீர் செல்வத்தின் இருக்கையை எடப்பாடி பழனிச்சாமி அருகிலேயே உள்ளது. தனை எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை. இதற்கிடையே தான் நேற்று 2வது நாள் சட்டசபை கூட்டத்தின்போது பேச அனுமதிக்காததை கண்டித்து, அதிமுகவினர் கூச்சல் குழப்பம் செய்தனர். இதையடுத்து அவர்கள் சபை காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். இதனை கண்டித்து அதிமுக சார்பில் இன்று இன்றுஒரு நாள் வள்ளூவர் கோட்டத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.

உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுப்பு
இதற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இதையடுத்து தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதம் இருக்க இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் வந்தனர். அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்டடனர். இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் வைக்கப்பட்டனர்.

750 பேர் மீது வழக்கு
இந்நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக எடப்பாடி பழனிச்சாமி உள்பட 750 அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல் உள்பட 2 பிரிவுகளின் கீழ் 750 பேரின் மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வழக்கில் கூடுதல் பிரிவுகள் இணைக்கப்படலாம் என கூறப்பட்டு வருகிறது.
-
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
2000 ரூபாய் மகளிர் உரிமை தொகை சாத்தியமா .. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
எங்களுக்கா ஓட்டு இல்லை? நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 9 இடங்களில் டெபாசிட் இழந்ததே! கிருஷ்ணசாமி பதிலடி -
எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விட்ட செங்கோட்டையன்.. 'நாளை பார்ப்பீர்கள்'.. அதிரடி பேட்டி -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்












Click it and Unblock the Notifications