டிஎஸ்பி, உதவி ஆணையர்கள் உட்பட 24 அதிகாரிகள் இடமாற்றம்.. பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உத்தரவு!
சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் டிஸ்பி மற்றும் உதவி ஆணையர்கள் உள்ளிட்ட 24 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 24 காவல்துறை அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்து தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் புத்தாண்டின் போது தமிழக அரசு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அறிவிப்பை வெளியிட்டது. முதலில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியான சூழலில், பின்னர் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் பலரும் பதவி உயர்வின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று தமிழ்நாடு காவல்துறையில் டிஎஸ்பி மற்றும் உதவி ஆணையர்கள் உள்ளிட்ட 24 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராயபுரம் உதவி ஆணையராக இருக்கும் ராஜாபால், சென்னை கிரைம் பிரான்ச் உதவி ஆணையர் காயத்ரி, மீனம்பாக்கம் உதவி ஆணையர் முகேஷ் ஜெயக்குமார், செண்ட் தாமஸ் மவுண்ட் உதவி ஆணையர் முரளி உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் கிண்டு உதவி ஆணையர் விஜயராமலு, கோட்டூர்புரம் உதவி ஆணையர் பாரதி ராஜன், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் பால் ஸ்டீபன், வரதராஜன், ஷிபு குமார் உள்ளிட்டோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சிக்குள்ளேயே இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த 24 காவல்துறை அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்து தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார். சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருவது பேசுபொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications