தமிழ்நாட்டில் கொட்டப்படும் கேரள கழிவுகள்.. இனியும் இது நடந்தால்.. காவல்துறை அதிரடி ‘வார்னிங்’!
சென்னை : கேரளாவில் இருந்து லாரிகளில் தமிழ்நாட்டுக்கு கழிவுகளை ஏற்றி வந்து கொட்டினால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு - கேரளா எல்லையோர மாவட்டங்களில் கேரளாவிலிருந்து கோழி இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை சட்டவிரோதமாக கொட்டப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து எல்லையோர மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கேரள கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது தொடர்பாகவும், அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பாகவும் தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

டிஜிபிக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தென்காசி மாவட்டத்திற்கு கடந்த டிசம்பர் 8ஆம் தேதி அன்று வருகை புரிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டப்படும் கேரள மாநில கழிவுகளினால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்த தனது அக்கறையினை வெளிபடுத்தினார். மேலும் இந்த பிரச்சனையை களைய நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை டிஜிபிக்கு அறிவுரை வழங்கினார். இதன் பேரில் தமிழக கேரளா எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி போன்றவற்றில் கேரளாவிலிருந்து கோழி இறைச்சி கழிவுகள், நெகிழி கழிவுகள் போன்றவை சட்டவிரோதமாக கொட்டப்பட்டு வருவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து எல்லையோர மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பணத்திற்கு ஆசைப்பட்டு
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் திரும்ப வரும்போது குறைந்த பணத்திற்கு ஆசைப்பட்டு அங்குள்ள இடைத்தரகர்கள் மூலம் கழிவுகளை ஏற்றி வந்து இங்கு கொட்டிவிடுகின்றனர். மேலும் தமிழகத்திலிருந்து கேரளாவில் பழைய இரும்பு வியாபாரம் செய்யும் பலர், அங்குள்ள நபர்களின் கடைகளில் குப்பைகளிலிருந்து பழைய இரும்பை பிரித்து எடுத்து விட்டு பின்பு மீதமாகும் உபயோகமில்லா குப்பையினை தமிழக எல்லைக்குள் சட்டவிரோதமாக கடத்துகின்றனர். இவற்றை தமிழகத்தில் உள்ள சில இடைத்தரகர்களின் உதவியோடு செல்கின்றனர். ஆள் நடமாட்டமில்லாத இடங்களில் கொட்டிச் செல்கின்றனர். மேலும் இது சம்பந்தமாக தமிழக கேரளா எல்லையோர மாவட்டத்திலுள்ள கன ரக உரிமையாளர் கூட்டமைப்பினரிடம் கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டும் கும்பல்
ஏற்கனவே கழிவுகள் கொட்டிய விவகாரத்தில் தென்காசி மாவட்டத்திலுள்ள திருவேங்கடம் காவல் நிலையத்தில் இரு வழக்குகளும், ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழக காவல்துறை தனிப்படை அமைத்து, இவ்வழக்குகளின் குற்றவாளிகளை கண்காணித்து, ஏழு கன ரக வாகனங்களை பறிமுதல் செய்தும், ஒன்பது நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தமிழக கேரளா எல்லையோர சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் தென்காசி மாவட்டத்திற்குள் இது போன்று சட்ட விரோதமாக புளியரை சோதனை சாவடி வழியாக நுழைய முயற்சித்த நாற்பத்தைந்து வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு மேற்படி வாகனங்கள் கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

நடவடிக்கை
மேலும், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.கிருஷ்ணராஜின் தொடர் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கையினால் ஊத்துமலை காவல் நிலைய சரகத்தில் 13.12.2022ம் தேதியன்று பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பயனில்லாத பழைய டயர்கள் அடங்கிய கழிவுகளை கேரளவிலிருந்து கொண்டு வந்த புனலூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த இடைதரகரான கருப்பசாமி என்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டும் கழிவுகளை ஏற்றி வந்த கனரக வாகனம் பறிமுதலும் செய்யப்பட்டது.

ஸ்பெஷல் ஃபோர்ஸ்
மேலும் கேரளாவிலிருந்து உயிர் மருத்துவ கழிவுகள் கொண்டு வரப்பட்டு தமிழகத்தில் கொட்டப்படுவதை தடுப்பதற்கு, தென்மண்டலத்தில் இதற்கென ஒரு பிரத்யோக சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதில் சம்பந்தப்பட்டுள்ள இடைத்தரகர்கள் பற்றிய தரவுகளை சேகரித்து மேற்படி நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யப்படும் என்றும் தென்மண்டல காவல்துறை தலைவர் ஆஸ்ரா கர்க் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications