சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Pongal Gift 2022: பொங்கல் பொருட்கள் தரமாக இருக்கிறதா? முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு!

நியாயவிலைக்கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்கும் பணிகளை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் கண்காணிக்க வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ரேசன்கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்கும் பணிகளை அமைச்சர் பெருமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வருகிற ஜனவரி 4ம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

நீங்க இல்லைனா எப்பவோ பாட்டு கேக்குறத நிறுத்தியிருப்போம் சார்.. KJ யேசுதாஸ் பிறந்தநாள் இன்றுநீங்க இல்லைனா எப்பவோ பாட்டு கேக்குறத நிறுத்தியிருப்போம் சார்.. KJ யேசுதாஸ் பிறந்தநாள் இன்று

இந்தப் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய பொருட்களும் கரும்பும் இடம்பெற்றுள்ளது.

ரேசன் கடைகளில் பொங்கல் பொருட்கள்

ரேசன் கடைகளில் பொங்கல் பொருட்கள்

1088 கோடி ரூபாய் செலவில் 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு இந்தப் பரிசு பொருட்கள் வழங்கப்பட இருக்கின்றன. கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொருட்களை வினியோகிக்க வேண்டும் என்றும், அனைத்து ரே‌ஷன் கடை பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ரே‌ஷன் கடைகளில் கூட்ட நெரிசல் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வழிகாட்டு நெறிமுறை

கொரோனா வழிகாட்டு நெறிமுறை

ஒவ்வொரு ரே‌ஷன் கடைகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. அவர்களை ஒவ்வொரு நாட்களிலும் நேரத்தை குறிப்பிட்டு பொங்கல் பரிசு பொருட்களை பெறுவதற்கு வரவழைக்க டோக்கன் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. தினமும் 200 குடும்ப அட்டைகள் வீதம் பொருட்கள் வழங்க வேண்டும் என்று கடை ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை சமூக இடைவெளி, கிருமி நாசினி, முககவசம் போன்றவற்றை கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பொருட்கள் எப்படி

பொருட்கள் எப்படி

ரேசன் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருட்கள் தரமற்றவையாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கண்காணிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்றாலும் மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை உவகையுடன் கொண்டாடும் வகையில் கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தேன்.

விஷமத்தனமான கருத்துக்கள்

விஷமத்தனமான கருத்துக்கள்

இதன்படி 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக்கடைகளில் நமது அரசுக்கு பெரும் நிதி நெருக்கடி வரும் இச்சூழலிலும் மக்களின் நலன் கருதி 1,297 கோடி ரூபாய் செலவில் இத்தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்கப்படுவதை நானே நேரடியாகச்சென்று நியாயவிலைக்கடைகளில் ஆய்வு செய்தேன். மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டத்தைப் பற்றி சிலர் தவறான விஷமத்தனமான கருத்துகளை பரப்பி வருகின்றனர்.

Recommended Video

    Pongal Thoguppu 2022 | Pongal Gift எப்படி இருக்கு? | Oneindia Tamil
    பொங்கல் பரிசுப்பொருள்கள்

    பொங்கல் பரிசுப்பொருள்கள்

    எனவே இந்தப்பணிகள் முறையாக நடைபெற்று வருவதையும் தரமான பொருட்கள் எவ்வித புகார்களும் இன்றி அனைவருக்கும் கிடைக்கப்பெறுவதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். இதனைக்கருத்தில் கொண்டு நியாயவிலைக்கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்கும் பணிகளை அமைச்சர் பெருமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணித்து அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசுப்பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Pongal parisu thoguppu 2022: (பொங்கல் பரிசுத் தொகுப்பு 2022) The Chief Minister also directed the Minister to keep a close watch on the distribution of Pongal parisu thoguppu at the ration shops Stalin announced.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X