தாம்பரத்தில் இருந்து புறப்படும் பொங்கல் சிறப்பு ரயில்கள்.. எதில் எல்லாம் இன்னும் இருக்கைகள் உள்ளது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம்பரத்தில் இருந்து வருகிற 12, 14 ஆகிய தேதிகளில் புறப்படும் பொங்கல் சிறப்பு ரயில்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சற்று நேரத்தில் விற்றுத்தீர்ந்துவிட்டது. தற்போதைய நிலையில், 14-ந்தேதி தாம்பரம்-நாகர்கோவில், 9-ந்தேதி செங்கல்பட்டு-நெல்லை சிறப்பு ரெயிலில் படுக்கை வசதி பெட்டி நிரம்பாமல் இருந்தது. இதேபோல் எதில் எல்லாம் காலியிடம் இருந்தது என்பதை பார்ப்போம்.

பொங்கல் பண்டிகை வருகிற 14, 15, 16, 17 ஆம் தேதிகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கமாகும். பண்டிகை காலங்களில் சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் முதலாவதாக ரயில் சேவையை தேர்வு செய்வார்கள்.

Pongal special trains departing from Tambaram 2026 Which trains still have seats available

ஆனால் ரயில்களில் அவ்வளவு எளிதாக டிக்கெட் கிடைப்பபது இல்லை.. பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட்டுகள் உடனே விற்று தீர்ந்துவிடும். சிறப்பு ரயில்கள் அறிவித்தாலும் டிக்கெட் கிடைப்பது இல்லை.. ஏனெனில் தென் மாவட்ட மக்கள் ரயிலில் செல்வதையே விரும்புகிறார்கள்

பொங்கல் ரயில்கள் முன்பதிவு

அந்தவகையில், பொங்கல் பண்டிகைக்கான வழக்கமான ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. எந்த ரயில்களிலும் டிக்கெட் இல்லை. இதில் டிக்கெட் கிடைக்காத பயணிகள் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு குறித்து காத்திருந்தனர். அதன்படி, நேற்று முன்தினம் தெற்கு ரயில்வே சார்பில் சொந்த ஊர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான முன்பதிவு நேற்று காலை தொடங்கியது. இந்தநிலையில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் தாம்பரத்தில் இருந்து வருகிற 12-ந்தேதி கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரயிலில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டது.

டிக்கெட் தீர்ந்த ரயில்கள்

நேற்று மாலை நிலவரப்படி. 14-ந்தேதி தாம்பரம்-நாகர்கோவில், 9-ந்தேதி செங்கல்பட்டு-நெல்லை சிறப்பு ரயிலில் படுக்கை வசதி பெட்டி மட்டும் விற்று விட்டன. 9-ந்தேதி எழும்பூர்-நெல்லை சிறப்பு ரயிலில் படுக்கை வசதி பெட்டியிலும் விற்றுவிட்டது. 14-ந்தேதி தாம்பரம்-ராமேசுவரம் ஆகிய ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத்தீர்ந்தன. இதேபோல, வருகிற 18-ந்தேதி நாகர்கோவில்-தாம்பரம், 17-ந்தேதி நெல்லை-செங்கல்பட்டு ஆகிய ரெயில்களில் டிக்கெட்டுகள் முடிந்துவிட்டன.

டிக்கெட்டுகள் உள்ள ரயில்கள் விவரம்

இதேபோல, ராமேஸ்வரம்-தாம்பரம் சிறப்பு ரயிலில்13, 20 ஆகிய தேதிகளிலும், தாம்பரம்-ராமேஸ்வரம் சிறப்பு ரயிலில் 21-ந்தேதியும், நெல்லை-எழும்பூர் சிறப்பு ரயிலில் 8-ந்தேதியும் டிக்கெட்டுகள் உள்ளன. அதேபோல் செங்கல்பட்டு-நெல்லை ரயிலில் 17-ந்தேதியும், மற்றொரு நெல்லை-செங்கல்பட்டு ரயிலில் 9,16 ஆகிய தேதிகளிலும், கன்னியாகுமரி-தாம்பரம் 13,20 ஆகிய தேதிகளிலும், தாம்பரம்-கன்னியாகுமரி 19-ந்தேதியும் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் இன்னும் முடியாமல் இருந்தது. பொங்கலுக்கு எழும்பூரில் இருந்து 12,13 மற்றும் 14-ந்தேதிகளுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும் என தென்மாவட்ட பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+