இந்த தலை அந்த உடலுடன் இணைய போகிறது! திரிஷாவா? ஐஸ்வர்யா ராயா? டிரெண்டாகும் பொன்னியின் செல்வன் போஸ்டர்
சென்னை : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படம் தொடர்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்?
இந்தியாவின் கிளாசிக் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் எப்போது வெளியாகும் என ரசிகர்களும் ஏன் படத்தில் நடித்துள்ள நடிகர்களை மிக்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

பொன்னியின் செல்வன்
மெட்ராஸ் டாக்கீஸ் உடன் இணைந்து லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். அவரது இசையில் வெளியான பாடல்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது. குறிப்பாக பொன்னி நதி பார்க்கணுமே பாடல் அனைத்து தரப்பினரையுமே கவர்ந்திருக்கிறது.

பலத்த எதிர்பார்ப்பு
இது ஒரு புறம் இருக்க இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, பிரகாஷ்ராஜ், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. தமிழக வாசகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் சோழ சாம்ராஜ்யத்தின் வரலாற்றை புனைவான அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலே படமாக உருவாகி இருக்கிறது. சோழ சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு நடந்த அதிகார போராட்டம், வன்முறை, சூழ்ச்சி, வீரம், பாசம் என கலந்து கட்டி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் முதல் பாகம் தான் தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது.

நட்சத்திர பட்டாளம்
படத்தின் புகழ்பெற்ற வந்தியத்தேவன் பாத்திரத்தில் கார்த்தியும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், ஆதித்த கரிகாலனாக விக்ரமும் நடித்திருக்கிறார்கள். அருண்மொழிவர்மனின் சகோதரியான குந்தவை நாச்சியார் கதாபாத்திரத்தில் திரிஷாவும், கிட்டத்தட்ட வில்லி கதாபாத்திரம் போல இருந்தாலும் மற்றொரு நாயகி போல இருக்கும் நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயும் நடித்துள்ளனர்.

திரிஷா? ஐஸ்வர்யா ராய்?
படத்தின் டீசர் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் திரிஷாவின் ரசிகர்களும் ஐஸ்வர்யா ராய் ரசிகர்களும் ஒருபுறம் மோதிக் கொண்டிருக்கின்றனர் என்றே சொல்லலாம். நீண்ட காலமாக திரையுலகில் நாயகிகளாக கொலைச்சி வரும் திரிஷாவின் ரசிகர்களும் ஐஸ்வர்யா ராயின் ரசிகர்களும் படத்தில் யார் அழகு என விவாதம் நடத்தி வருகின்றனர் இருவருமே கிட்டத்தட்ட 40 வயதை ஒட்டியவர்கள் என்றாலும் படத்தில் இருவருமே மிக இளமையாக காட்சியளிக்கின்றனர் ஆனால் தங்கள்நாயகி தான் அழகு என போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

போஸ்டர்?
இந்த நிலையில் இம்சை அரசன் படத்தில் வருவது போல இந்த தலை அந்த உடலுடன் இணையப் போகிறது என்பது போல ஒரு போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. திரிஷாவின் உடலுடன் ஐஸ்வர்யாவின் தலையை மாற்றி ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரை பிரிசாவும் ஐஸ்வர்யா ராயும் ஒன்னு அதை அறியாதவர்கள் வாயில் மண் என பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். அது உண்மையில் ஒட்டப்பட்டதா இல்லை சேட்டை பிடித்த மீம் கிரியேட்டர்கள் வேலையா எனவும் விவாதம் நடக்கிறது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications