சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவை நினைத்து கலக்கமா.. இந்த மூன்றை மட்டும் செய்யுங்க.. #positivityspread

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தொற்று உங்களுக்கு வராமல் தடுக்க முகக் கவசம் அணிவது , தன்னம்பிக்கையுடன் செயல்படுவது, தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்வது தான் நல்ல பலனைத் தரும்.

Recommended Video

    கொரோனாவை நினைத்து கலக்கமா.. இந்த மூன்றை மட்டும் செய்யுங்க.. #positivityspread

    தமிழகத்தில் இப்போது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது கொரானா பாதிப்புதான் ‌.

    கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகமாக இருப்பதன் காரணமாக ஒவ்வொரு மருத்துவமனை முன்பு இடம் கேட்டு நோயாளிகள் ஏராளமான ஆம்புலன்ஸ்களில் காத்திருக்கிறார்கள். பலர் ஆக்சிஜன் பெட் வசதி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

    கொரோனா வந்தால் பயப்பட வேண்டாம்.. எளிதாக வெல்லலாம்.. இளமாறன் சொல்வதை கேளுங்க! கொரோனா வந்தால் பயப்பட வேண்டாம்.. எளிதாக வெல்லலாம்.. இளமாறன் சொல்வதை கேளுங்க!

    படுக்கை வசதி

    படுக்கை வசதி

    தற்போதைய நிலையில் ஆக்சிஜன் பெட் கிடைக்க வேண்டுமென்றால் ஒருவர் நோய்த் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைய வேண்டும் அல்லது உயிரிழக்க வேண்டும் என்கிற நிலைதான் பல இடங்களில் காணப்படுகிறது. ஆக்சிசன் பெட் வசதிகள் கூடுதலாக அமைக்கப்பட்டாலும் நோய்த்தொற்று எண்ணிக்கை மிகமிக அதிகரித்துக்கொண்டே செல்வதால் உரிய பெட் வசதிகளை ஒதுக்குவது அரசுக்கு சவாலாக உள்ளது.

    33ஆயிரம் பேர்

    33ஆயிரம் பேர்

    தமிழகத்தில் நேற்று மட்டும் 33 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் . உயிரிழப்பு ஒரே நாளில் 300க்கு மேல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 4600 பேர் கொரோனாவால் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களிலும் பாதிப்பு மிக மிக அதிகமாக உள்ளது.

    கூட்டம் வேண்டாம்

    கூட்டம் வேண்டாம்

    எனவே மக்கள் கொரோனா வராமல் தடுக்க முகக் கவசம் அணிவது தான் ஒரே நல்ல தீர்வு. தற்போதைய நிலையில் பலர் முக கவசம் அணியாமல் சாலைகளில் சுற்றித் திரிகிறார்கள் ‌. தங்கள் குடும்பத்திற்கு வந்தால் மட்டுமே ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் செயல்படும் நிலையே இருக்கிறது. இது மிகவும் தவறானது. கொரோனாவை தடுக்க கட்டாயம் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். முகக் கவசம் அணிந்தாலும்கூட்டம் கூட்டமாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். கூட்டம் கூட்டமாக சென்றால் முகக்கவசம் அணிவதில் எந்த பலனும் இருக்காது. எனவே கூட்டங்களில் இருப்பதை தவிருங்கள்.

    ரெம்டெசிவிர்

    ரெம்டெசிவிர்

    ஒருவேளை உங்களை கொரோனா தாக்கி விட்டால் என்ன செய்வது? கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் தன்னம்பிக்கை மிக முக்கியம். கொரோனாவை வென்று விடுவோம் என்ற தன்னம்பிக்கையுடன் நீங்கள் இருந்தீர்கள் என்றால் நீங்கள் அதிலிருந்து நிச்சயம் மீள்வீர்கள். இதற்கு ஒரு உதாரணம் நான் சொல்கிறேன். மத்திய பிரதேசத்தில் போலி ரெம்டெசிவிர் மருந்தை சாப்பிட்ட ஏராளமான நோயாளிகளில் 90% பேர் குணமடைந்துள்ளனர். அந்த மருந்தில் வெறும் குளுக்கோஸ் மற்றும் உப்பு நீர்தான் கலந்து இருந்திருந்து. இதைக் குடித்து ஆக்சிஜன் தேவை உள்ளவர்கள் எப்படி குணமாக இருக்க முடியும். இதற்கு காரணம் அவர்கள் ரெம்டெசிவிர் மருந்தை தாங்கள் சாப்பிட்டு விட்டோம் என்று நம்பி இதுதான். இந்த மருந்தை சாப்பிட்டு விட்டோம் இனி குணமாகிவிடும் என்று அவர்கள் நம்பியதால் கொரோனா நோயிலிருந்து குணமடைய காரணம் . எனவே தன்னம்பிக்கை மிக முக்கியம்.

    வேண்டாம் அலட்சியம்

    வேண்டாம் அலட்சியம்

    காய்ச்சல் தலைவலி உடல் வலி போன்ற ஏதேனும் அறிகுறிகள் உங்களுக்கு வந்தால் உடனே மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளாமல் மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கி சாப்பிடுவது தெரிந்தவர்களிடம் ஊசி போடுவது போன்ற காரியங்களை தயவுசெய்து செய்ய வேண்டாம். கொரனோ பாதிப்புக்குள்ளாகி அதிகம் பேர் உயிரிழக்க மிக முக்கிய காரணம் அவர்கள் மிகத் தாமதமாக சிகிச்சைக்கு வருவதுதான். மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கி சாப்பிடுவது தெரிந்தவரிடம் ஊசி போடுவது இவையெல்லாம் செய்து கேட்காமல் கடைசியில் மிக தீவிரமான நிலைக்கு சென்ற பிறகு வீட்டில் இருந்து பலர் மருத்துவமனைக்கு வருகிறார்கள். வீட்டில் இருந்து நோய்தொற்று முற்றிய நிலையில் வந்தவர்கள் தான் இன்றைக்கு அதிகம் உயிரிழந்திருக்கிறார்கள். எனவே உங்களுக்கு காய்ச்சல் தலைவலி உள்ளிட்ட எந்த அறிகுறி வந்தாலும் உடனே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். பரிசோதனையில் குரலை உறுதி செய்யப்பட்டால் தன்னம்பிக்கை இழக்காமல் மருத்துவ ஆலோசனைப்படி உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். கோவிட் மையங்களில் இருந்தாலும் சரி , விட்டு தனிமையில் இருந்தாலும் சரி சரியான உணவுகளை சாப்பிடுங்கள் . தன்னம்பிக்கையுடன் நோயை எதிர்கொள்ளுங்கள்.

    நோய் பரவாது

    நோய் பரவாது

    மீண்டும் ஒரு முறை முககவசத்தை பற்றி சொல்கிறேன். தயவு செய்து அனைவரும் முக கவசம் சரியான முறையில் அணியுங்கள். நீங்கள் முக கவசம் அணிந்தால் உங்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் தொற்று பரவாது. இதேபோல் மற்றவர்களிடமிருந்து உங்களுக்கு நோய் தொற்று பரவாது. அவர்களிடமிருந்து இன்னொருவருக்கும் பரவாது. அனைவரும் சரியான முறையில் முகக்கவசம் அணிந்து செயல்பட்டால் நோயை நிச்சயம் வென்று விட முடியும்.

    English summary
    People need to know how to spread covid-19 , importants of mask and covid test importance. This Three things definitely relief from covid-19.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X