அஞ்சலக சேமிப்புத் திட்டம் முதல் காப்பீடு வரை, சென்னைக்கு சூப்பர் வாய்ப்பு! தபால்துறை பெரிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள், தபால் சேவைகள், காப்பீடு.. இவற்றில் ஏதாவது குறைகள் இருக்கிறதா? தபால்துறையிடம் புகார் கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லையா? அப்படியானால், சென்னையில் நடைபெற உள்ள இந்தக் குறைதீர்ப்பு முகாம் உங்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.. எங்கே, எப்போது நடைபெறுகிறது? புகார் கொடுக்க என்ன செய்ய வேண்டும்? இதை பற்றிதான் ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!

அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் என்றால் என்ன என்று தெரியுமா? வங்கிகளை போலவே தபால் நிலையங்களிலும் மக்கள் தங்களுடைய பணத்தை சேமித்து வைக்கலாம்..


post office

அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள்

இந்த சேமிப்புக்கு குறிப்பிட்ட திட்டங்களின் விதிமுறைகளுக்கு ஏற்ப வட்டியும் கிடைக்கும்.. சேமிப்புக் கணக்கு, அஞ்சலக ஆயுள் காப்பீடு, ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீடு எனப் பல்வேறு சேவைகள் தபால்துறை மூலம் வழங்கப்படுகின்றன..

ஆனால், இந்த சேவைகளை பயன்படுத்தும்போது சிலருக்கு கணக்கு, பணப் பரிவர்த்தனை, காப்பீடு உள்ளிட்ட விஷயங்களில் குறைகள் ஏற்படலாம்.. அப்படிப்பட்ட குறைகளைத் தெரிவித்து தீர்வு பெறுவதற்காக தபால்துறை சார்பில் குறைதீர்ப்பு முகாம்கள் அடிக்கடி நடத்தப்படுகின்றன.. அந்த வகையில், சென்னையிலும் இப்போது நடைபெற போகிறது.. அந்த முகாம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது..

சென்னையில் குறைதீர்ப்பு முகாம்

அதில், "சென்னை நகர தெற்கு கோட்ட அளவிலான தபால்துறை குறைதீர்ப்பு முகாம் அக்டோபர் 27-ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.. சென்னை தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள அஞ்சலக முதுநிலைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது.. சென்னை 600017 என்ற அஞ்சல் குறியீட்டைக் கொண்ட இந்த அலுவலகத்தில், அஞ்சல் துறை சார்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான தனிப்பட்ட புகார்கள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும்..

இந்த முகாமில் தங்களுடைய குறைகளைத் தெரிவிக்க விரும்பும் வாடிக்கையாளர்கள், புகார்களை சாதாரண தபால் அல்லது விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.. புகார் சென்றடைய வேண்டிய முகவரி: அஞ்சலக முதுநிலைக் கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை நகர தெற்கு கோட்டம்.. புகார்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 2026 அக்டோபர் 22-ம் தேதியாகும்..

தபால் அல்லது பார்சல் தொடர்பான புகார்

தபால் அல்லது பார்சல் தொடர்பான புகார் என்றால், அஞ்சலிட்ட தேதி, நேரம், அனுப்புநர் மற்றும் பெறுநரின் முழு முகவரி, தேதியுடன் கூடிய ரசீது எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்..

அஞ்சலக சேமிப்புக் கணக்கு, அஞ்சலக ஆயுள் காப்பீடு அல்லது ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீடு தொடர்பான புகார் என்றால், கணக்கு அல்லது பாலிசி எண், பெயர், பணம் டெபாசிட் செய்தவர் அல்லது காப்பீடு எடுத்தவரின் முழு முகவரி, சம்பந்தப்பட்ட அஞ்சலகத்தின் பெயர் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும்.. ஏற்கெனவே தபால்துறைக்கு அனுப்பிய கடிதங்கள் இருந்தால், அவற்றின் விவரங்களையும் புகாருடன் சேர்க்க வேண்டும்..

புகார்களை சாதாரண தபால் அல்லது பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.. தனியார் கூரியர் மூலம் அனுப்பப்படும் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.. புகார் அனுப்பும் அஞ்சல் உறையின் மேல், "கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் சென்னை நகர தெற்கு கோட்டம்" என்று தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+