மீண்டும் பவர் கட் வரலாம்... போய் ஜெனரேட்டர் வாங்குங்க மக்களே! - எச்சரிக்கும் அண்ணாமலை
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் மின்வெட்டு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால் அனைவரும் ஜெனரேட்டர் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் "2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எண்ணூர் அனல் மின் நிலைய திட்டம் தொடர்பாக பி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனத்திடம் தமிழ்நாடு அரசு மின்வாரியமான டான்ஜெட்கோ ஒப்பந்தம் செய்தது.
ஆனால், அந்த நிறுவனத்திடம் வங்கிக் கணக்கில் போதிய இருப்பு இல்லாததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. ரூ.355 கோடி இழப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனமான பி.ஜி.ஆர். எனர்ஜியிடம் முறைகேடாக ரூ.4,472 கோடி மதிப்பில் மீண்டும் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து இருக்கிறது.

பி.ஜி.ஆருக்கும் கோபாலபுரத்துக்கும் தொடர்பு
கோபாலபுரத்தை சேர்ந்த நபர் பி.ஜி.அர். நிறுவனத்துக்கு பணம் கொடுத்து இருக்கிறார். பி.ஜி.ஆர். எனர்ஜிக்கும் திமுகவுக்கும் இரத்த பந்தம் உள்ளது. இது தொடர்பாக கடந்த ஆண்டு நான் குற்றம்சாட்டியதற்காக என் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. பி.ஜி.ஆர். நிறுவனத்துக்காக ஆஜராகும் வழக்கறிஞர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன்தான். 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் இருந்தபோது இதே பி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனம் மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்தத்தை வாங்கினார்கள்.

பல முறைகேடுகளில் ஈடுபட்ட நிறுவனம்
2010 ஆம் ஆண்டு சி.ஏ.ஜி. தணிக்கையில் பி.ஜி.ஆர். எனர்ஜியால் அதிக நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பி.ஜி.ஆர். நிறுவனத்தால் அந்த தொழில்நுட்பத்தை முறையாக கையாள முடியவில்லை, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பல ஆண்டுகளாக லாபத்தையே காட்டாத பி.ஜி.ஆர். நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காகவும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளனர்.

மீண்டும் மின்வெட்டு வரலாம்
10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் அதிகளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கு மிக முக்கிய காரணம் பி.ஜி.ஆர். போன்ற நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்ததுதான். அனைவரும் ஜெனரேட்டர் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், மீண்டும் மின்வெட்டு ஏற்படலாம். 2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறை பி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனத்தில் சோதனையிட்டபோது போலியாக ரூ.113 கோடி பில் கண்டெடுக்கப்பட்டது. அந்த ரூ.113 கோடி அரசு அதிகாரிகளும் லஞ்சமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாடு பாஜக சார்பில் புகாரளிப்போம்
திடீரென பி.ஜி.ஆர். நிறுவனம் எப்படி புனிதமாக மாறியது. அவர்கள் மீது ஏதாவது தீர்த்தம் தெளிக்கப்பட்டதா? நமது கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும். திமுக ஆட்சி முடிவதற்குள் ரூ.36,000 கோடி அளவுக்கு பி.ஜி.ஆர். நிறுவனத்துக்கு டான்ஜெட்கோ கொடுக்க உள்ளது. திமுக ஆட்சி 2026 அல்லது 2024-லும் முடியலாம்.
இதுகுறித்து செபிக்கு தமிழ்நாடு பாஜக புகார் கடிதம் எழுத உள்ளது. அதேபோல் மத்திய கணக்கு தணிக்கை வாரியம் மற்றும் மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கு கடிதம் எழுத இருக்கிறோம்." என்றார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications