மழை பெய்தாலே மின் தடை? “இன்று எங்குமே பவர் கட் இல்லை.. காரணம் இவர்தான்” - அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னை : கடந்த காலங்களில் சிறிய மழைக்கே மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஆனால், தற்போது அதுபோன்ற சூழல் இல்லை, இதற்கு முதல்வர் எடுத்த நடவடிக்கையே காரணம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொடர் மழையிலும் மின் விநியோகத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.

மழையிலும் மின் தடை இல்லை
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், "தமிழ்நாட்டில் தொடர் மழையிலும் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படவில்லை. சென்னையிலும் மழையால் மின்தடை பாதிப்பு இல்லை. சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், முதல்வர் ஸ்டாலின் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். குறிப்பாக, இந்த மழைக்கால சிறப்பு பணிக்காக 11,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு களப்பணியாற்றி வருகின்றனர். 1,040 பணியாளர்கள் பகலிலும், 600 பணியாளர்கள் இரவிலும் பணிபுரிந்து, மின் விநியோகத்தில் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர்.

சின்ன மழை பெஞ்சா போதும்
கடந்த காலங்களில் சிறிய மழைக்கே மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. லேசாக காற்றடித்தாலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்ற நிலை இருந்தது. ஆனால், அந்தச் சூழல் இப்போது இல்லை. தடையின்றி மின் விநியோகம் செய்ய பணியாளர்கள் 24 மணிநேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

ஸ்டாலின் போட்ட உத்தரவு
எவ்வளவு மழை பெய்தாலும் சரி, மின் விநியோகம் நிறுத்தப்படக் கூடாது. பாதிப்பு ஏற்பட்டால் மட்டும் மின்சாரம் நிறுத்தப்பட வேண்டும், அதுவும் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டு ஆட்சியில் மொத்தமே 2.20 லட்சம் விவசாய மின் இணைப்புத் தான் கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த அரசு அமைந்த 15 மாதத்தில் 1.5 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் சிறப்பு கவனம் எடுத்து செயல்படுமாறு உத்தரவிட்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

பில்லர் பாக்ஸ்
மேலும் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "சென்னையில் ஏறத்தாழ மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் 3,000க்கும் மேற்பட்ட பில்லர் பாக்ஸ்கள் 1 மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையில், பெருநகர் மாநகராட்சி நிர்வாகம் எந்த இடத்திலும் மழைநீர் தேங்காமல் இருக்க மிகச் சிறப்பாக நடவடிக்கை எடுத்துள்ளது. மின் விநியோகத்தை பொறுத்தவரை இன்னும் சென்னையில் விடுபட்ட இடங்களில் பில்லர் பாக்ஸ்கள் மழையால் பாதிப்பு இல்லாத இடங்களில் கூட 1 மீட்டர் அளவிற்கு உயர்த்தப்படும்.

இரவோடு இரவாக
நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தாலும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் திருவலங்காடு பகுதியில் மட்டும் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. அதுவும் இரவோடு இரவாக சரிசெய்யப்பட்டது." எனத் தெரிவித்தார், மேலும், மழைக்காலங்களில் பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications