யார் இந்த பிரபு.. பெங்களுரூ டூ சென்னை.- சசிகலாவுடன் 22 மணி நேரம் பயணித்தவர்!
சென்னை: சசிகலா நேற்று காலை பெங்களூருவில் இருந்து சென்னை புறப்பட்டு வந்தார். சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு அதிகாலை தியாகராய நகரில் உள்ள வீட்டிற்கு சென்றார்.
Recommended Video

அவருடன் 22 மணி நேரம் வாகனத்தை ஓட்டியபடி ஒருவர் பயணித்துள்ளார். அவர் பெயர் பிரபு. இவர் ஜெயலலிதாவிடம் 25 வருடம் டிரைவராக இருந்தவர் ஆவார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்ததால் சசிகலா கடந்த மாதம் 27ம் தேதி விடுதலையானார். ஆனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

சென்னை புறப்பட்டார்
சிகிச்சை முடிந்து பூரண குணம் அடைந்த சசிகலா கடந்த வாரம் பெங்களூரு மருத்துவமனையில் இருந்து பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வு வெடுத்தார் ஒரு வாரம் ஓய்வுக்கு பின்னர் நேற்று பெங்களூருவில் இருந்து சென்னைக்கு சசிகலா காரில் புறப்பட்டார்.

அமமுகவினர் வரவேற்பு
சசிகலா 4 வருட சிறை தண்டனை முடிந்து தமிழகம் திரும்பியதால், அவரை பார்க்க அமமுகவினர் பலர் மிகுந்த ஆர்வம் காட்டினார். இதனால் பெங்களூரு தொடங்கி சென்னை வரை அமமுகவினர் திரண்டு வந்து சசிகலாவை வரவேற்றனர். ஊடகங்களும் சசிகலா வீட்டை விட்டு புறப்பட்டது முதல் சென்னை வரும் வரை நேரலை செய்தன..

தாக்கம் ஏற்படும்
சசிகலா வருகைக்கு அமமுகவினர் அளித்த வரவேற்பு, ஊடகங்களின் நேரலை மற்றும் சசிகலா தமிழகத்திற்கு வருகையால் என்ன மாதிரியான அரசியல் மாற்றம் ஏற்படும் என்ற ஊடக விவாதங்கள் என நேற்று முழுவதும் சசிகலா என்ற ஒற்றை பெயரையே தமிழகத்தில் உச்சரிக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது. சசிகலா வருகை ஆளும் அதிமுகவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு இருந்த காரணத்தால் ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

22 மணி நேர பயணம்
இதனிடையே சென்னையில் பல்வேறு இடங்களில் ஆதரவாளர்களை சந்தித்தார். இறுதியாக சசிகலா சென்னை வந்து ராமாவரம் எம்ஜிஆர் இல்லத்திற்கு அதிகாலையில் சென்றார். அதன்பிறகு இன்று அதிகாலை சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டிற்கு சென்றார். சசிகலா உடன் 22 மணி நேரம் வாகனத்தை ஓட்டியபடி ஒருவர் பயணித்துள்ளார். அவர் பெயர் பிரபு. இவர் ஜெயலலிதாவிடம் 25 வருடம் டிரைவராக இருந்தவர் ஆவார். ஜெயலலிதாவிற்கு கார் ஓட்டிய பிரபு, சசிகலாவிற்கு நேற்று கார் ஓட்டி உள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications