விஜய்க்கு லெப்ட் ஹேண்டாக மாறிய பிரஷாந்த் கிஷோர்! கூடவே வந்த ஆதவ்! புஸ்ஸி ஆனந்த் பின்னாடி போயிட்டாரே!
சென்னை: தவெக 2வது ஆண்டு தொடக்க விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் விழா நடக்கும் மேடைக்கு பிரசாந்த் கிஷோருடன் வருகை தந்த அக்கட்சியின் தலைவர் விஜய்.
ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. விஜயின் லெப்ட் ஹேண்ட் போல இந்த நிகழ்வில் பிரஷாந்த் கிஷோர் செயல்பட்டார்.

பொதுவாக விழா மேடையில் விஜய்தான் தனியாக மேடை ஏறுவார். அதன்பின் அவரை தொடர்ந்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேடை ஏறுவார். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.
இன்று பிரஷாந்த் கிஷோர்தான் விஜய் உடன் மேடை ஏறினார். இருவருக்கும் நிகராக மேடையில் மரியாதை அளிக்கப்பட்டது. பிரஷாந்த் கிஷோர் கிட்டத்தட்ட விஜயின் லெப்ட் ஹேண்ட் போல கூடவே இருந்தார்.
எப்போதும் லைம்லைட்டில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த் இன்று கொஞ்சம் பின்னால் இருந்தார். ஆதவ் அர்ஜுனா பிரஷாந்த் கிஷோரை தொடர்ந்து மேடைக்கு வந்ததால் அவரும் கவனிக்கப்பட்டார். தமிழக வெற்றிக் கழகத்தின் முகங்களில் ஒன்றாக இருந்த புஸ்ஸி ஆனந்த் திடீர் என்று இன்று கொஞ்சம் பின்னால் சென்றது கவனிக்கப்பட்டு உள்ளது.
இணையும் திட்டம்
அரசியல் ரீதியாக விஜய்யின் த.வெ.கவும், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் செயல்பட திட்டமிட்டுள்ளதாம். அதன்படி தேசிய அளவில் கொள்கை ரீதியாக இணைந்து செயல்பட இவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பிரஷாந்த் கிஷோர் உடன் நடந்த சந்திப்பில் நடிகர் விஜயிடம் அவர் முக்கியமான ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. .. விஜயை சந்தித்த பிரஷாந்த் கிஷோர்.. தமிழ்நாட்டில் திமுக அதிமுகவின் வாக்கு வங்கி சேர்த்து மொத்தமாக 60-70% உள்ளது. ஆனால் விஜய் இதை 60%க்கும் கீழ் கொண்டு வருவார். விஜயின் கட்சிக்கு மட்டுமே அதிமுக - திமுகவின் கூட்டு வாக்கு வங்கியை உடைக்கும் சக்தி உள்ளது என்று பிகே கூறி உள்ளாராம்.
இந்த சந்திப்பு மூலம் கட்சிக்கு 3 முக்கியமான தலைகள் ஆலோசனை வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கட்சியை நிர்மாணிப்பது தொடர்பான ஆலோசனைகளை மட்டும் பிரஷாந்த் கிஷோர் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டாவது தலை
இன்னொரு த.வெ.க.வின் தேர்தல் வியூகம் அமைக்கும் பணிகளை முன்னெடுக்கிறது ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனம். இதற்கான ஒப்பந்தத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யும், வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனத் தலைவர் ஆதவ் அர்ஜுனாவுக்குமிடையே நேற்று அக்ரிமெண்ட் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே, த.வெ.க.வின் தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் இந்த அக்ரிமெண்ட்டில் சைன் பண்ணியிருக்கிறார் விஜய்.
த.வெ.க.வின் தேர்தல் வியூகப்பணிகளை ஆதவ் அர்ஜுனா கவனிப்பார் என்பதால், ஜான் ஆரோக்கியசாமிக்கான பொசிசன் எது என்பது தெரியாத சூழல் இருந்தது. ஒரே உறையில் 2 கத்திகள் இருக்க முடியாது என்பதால், த.வெ.க.வுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து ஜான் விலகி விடுவார் என்கிற பேச்சு அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால், ஆதவ் அர்ஜுனாவும் ஜானும் இணைந்து பணியாற்ற வேண்டும் என விஜய் விரும்புகிறாராம். இதனால் விஜய்க்கு பர்சனல் அரசியல் ஆலோசனை, பர்சனலாக விஜய்க்கு அரசியல் ரீதியாக எப்படி பேச வேண்டும்.. எப்படி நடக்க வேண்டும் என்பது பற்றிய ஆலோசனைகளை ஜான் ஆரோக்கியசாமி வழங்குவார் என்று கூறப்படுகிறது.
அதாவது கட்சியை நிர்மாணிக்க, அடிப்படையை உருவாக்க பிரஷாந்த் கிஷோர்.. த.வெ.க.வின் தேர்தல் வியூகப்பணிகளை கவனிக்க ஆதவ் அர்ஜுனா.. விஜய்க்கு பர்சனல் அரசியல் ஆலோசனை வழங்க ஜான் ஆரோக்கியசாமி ஆகிய மும்மூர்த்திகள் இருப்பார்கள்.
-
சட்டஒழுங்கு நெருக்கடி.. உள்துறையை விட்டுக் கொடுக்கிறாரா முதல்வர் விஜய்? கைமாறும் போலீஸ் கண்ட்ரோல்? -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
உயரும் கட்டணம் + தனியார்மயம் + வாக்குறுதிகள் தள்ளிவைப்பு? கஜானாவை காக்க விஜய்யின் 3 திட்டங்கள் -
தவெக அரசுக்கு எதிராக நூதன போராட்டம்... முதல்வருக்கு பார்சலில் அனுப்பிய ஹியரிங் எய்டு! -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
இனி கோவில்களில் உள்ள கடைகளில் அதிக விலைக்கு விற்றால் அபராதம், உரிமம் ரத்து.. அறநிலையத்துறை அதிரடி! -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வன்னி அரசுக்கு வாய் கட்டு? தவெக தலைமை எடுத்த கறார் முடிவு! இடைத்தேர்தல் வேற வருதே! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. ஸ்டாலினுக்கு செக்.. எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம்.. ஆதவ்வின் மெகா மூவ்!












Click it and Unblock the Notifications