என்னம்மா நீங்க இப்படி பண்ணிட்டீங்களேம்மா! தலைவர் கோபமாயிட்டார்! பிரேமலதாவை திட்டி தீர்த்த எவ வேலு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நன்றாக போய்க் கொண்டிருந்த திமுக கூட்டணியில் சலசலப்பு எழத் தொடங்கி இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை போதை கலாச்சாரம் தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது என முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பிரேமலதா பேசியது எதிர்க்கட்சிகளின் கேலி கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது. இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு வர முக்கிய காரணமாக இருந்த எவ வேலு தன் பங்குக்கு பிரேமலதா விஜயகாந்த் திட்டி தீர்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி சேர இருந்த பிரேமலதாவை 10 சீட்டு, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக கூறி கூட்டணிக்கு அழைத்து வந்ததே எவ வேலு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணியில் உள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, திமுக கூட்டணியை ஆதரித்து சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அண்மையில் பிரச்சாரத்தில் அவர் வீசிய குண்டு, முதல்வர் ஸ்டாலினை செம டென்சன்படுத்தியிருக்கிறது.

அதாவது, இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா, தமிழ்நாடு முழுக்க எங்க அண்ணன் (ஸ்டாலின்) மீது ஒரே ஒரு குற்றச்சாட்டுதான் இருக்கு. எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதைக் கலாச்சாரம் இருக்கு. இதைத் தவிர வேறு என்ன குற்றச்சாட்டு சொல்ல முடியும்? என்று சரமாரியாக பேசினார்.

Tamil Nadu Assembly Election 2026 Premalatha Vijayakanth DMK

அந்த பேச்சைக் கேட்டு ஸ்டாலின் மற்றும் மேடையில் இருந்த தலைவர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டத்தில்கலந்து கொண்டவர்கள் என எல்லோருமே அதிர்ந்து போனார்கள். கூட்டம் முடிந்ததும் பிரேமலதாவின் முகத்தை பார்க்காமலே கிளம்பிச் சென்று விட்டார் ஸ்டாலின். அன்றைய இரவு அமைச்சர் ஏ.வ.வேலுவை தொடர்பு கொண்டு, பிரேமலதா பேசியதையு சுட்டிக்காட்டி தனது கோபத்த வெளிப்படுத்தியுள்ளார் ஸ்டாலின்.

உடனே, பிரேமலதாவிடம் பேசிய ஏ.வ.வேலு, என்னங்க இப்படி பேசிட்டீங்க? அதிமுகவும் பாஜகவும் திமுக மீது வைக்கிர குற்றச்சாட்டே இதுதான். அதையே நீங்களும் பேசியிருக்கீங்க. தலைவர் ரொம்பவும் கோபமாக இருக்கிறார். அவரை எப்படி சமாளிக்கிறதே என தெரியவில்லை. மேடை கிடைச்சதும் வாய்க்கு வந்ததெல்லாத்தையும் உளறாதீங்க என்று கடிந்து கொண்டிருக்கிறார்.

அதற்கு, நான் சொன்ன வந்த செய்தியே வேறு என்று பிரேமலதா சொல்ல, எதுவாக இருந்தாலும் போதை கலாச்சாரம், பாலியல் குற்றம் என பேசியிருக்க கூடாதுங்க. முன்னாலயும், பின்னாலயும் நீங்க எதுவேணாலும் பேசிருக்கலாம். ஆனா, பாலியல் குற்றச்சாட்டும், போதை விவகாரமும் என நீங்கள் சொன்னதுதான் மக்களிடமும் எதிர்க்கட்சிகளிடம் பெரிதாக பேசப்படும். அது கூட உங்களுக்கு தெரியலையே என்று தனது பங்குக்கு திட்டித்தீர்த்திருக்கிறார் அமைச்சர் வேலு என்கின்றன திமுக வட்டாரங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+