தேமுதிகவில் தலைமை மாற்றம்? விஜயகாந்த் பிறந்தநாளில் பிரேமலதா சொன்ன வார்த்தை!
சென்னை: தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video
விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கனிமொழி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகரும் சமக தலைவருமான சரத் குமார் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் 70வது பிறந்தநாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார். அவருடன் மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன், சண்முக பாண்டியன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். வெள்ளை சட்டை, பேண்ட் கறுப்பு மற்றும் கண்ணாடி அணிந்து விஜயகாந்த் தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். இதனைப் பார்த்த ஏராளமான தொண்டர்கள் உணர்ச்சிப்பெருக்கில் இருந்தனர்.
அதேபோல் நடிகர் சங்கர் சார்பாக பொருளாளர் கார்த்தி விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து கூறினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், சினிமா, அரசியல் என அனைத்திற்கும் அப்பாற்பட்டு விஜயகாந்தின் பிறந்தநாள் மக்களால் வறுமை ஒழிப்பு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயகாந்த் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி.
நடிகர் சந்தித்தில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க வேண்டும் என்று நேரம் கேட்டிருந்தனர். அதனால் இன்று சந்திக்க அழைத்தோம். அதனால் நடிகர் சங்கம் சார்பாக கார்த்தி நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.
விஜயகாந்த் எப்போதும் மனிதநேயமிக்க தலைவராக அறியப்படுபவர். இன்று மட்டுமல்ல, எப்போதும் அனைவருக்கும் உணவு வழங்கப்படும். இன்று மட்டுமல்ல, அது இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தொடரும். மருத்துவ முகாம், ரத்த தான முகாம், நலத்திட்ட உதவிகள் என் அனைத்தும் தொடர்ந்து நடைபெறும்.
தேமுதிகவில் உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. விரைவில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அப்போது தேமுதிக தலைமையில் மாற்றம் வருமா என்பது அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இதனால் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications