தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில பகுதிகளில் ‘ஜனாதிபதி ஆட்சி’.. குறுக்கே புகுந்து எச்.ராஜா பரபர!
சென்னை : தமிழ்நாட்டிற்கு ராணுவம் வர யாருடைய அனுமதியும் தேவையில்லை. தமிழ்நாட்டில் முழுமையாக ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டியது இல்லை. குறிப்பிட்ட பகுதியில் மட்டும் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரலாம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.
சட்டப்பேரவையில் தமிழ்நாடு ஆளுநர், பாதியிலேயே வெளியேறியது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநரை தமிழ்நாடு அரசு அவமரியாதை செய்துவிட்டதாக பாஜக, அதிமுக தலைவர்கள் கூறினாலும், ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்காமல் தவிர்த்த செயலை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு முதல்வரின் செயல்பாட்டைக் கண்டித்துள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மட்டும் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வரலாம் எனக் கூறியுள்ளார்.

ஆளுநர் - ஆதரவும் எதிர்ப்பும்
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டது முதலே, தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையின் சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்தார் ஆளுநர் ரவி. தானே சில பகுதிகளைச் சேர்த்து வாசித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த முதல்வர் ஸ்டாலின் வழக்கத்திற்கு மாறாக, ஆளுநர் உரைக்குப் பின் எழுந்து ஆளுநருக்கு எதிராக அவசர தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

பாஜக குற்றச்சாட்டு
இதனால் கோபமடைந்த ஆளுநர் கூட்டம் முடிவதற்கு முன்பாகவே சபையில் இருந்து வேகமாக வெளியேறி விட்டார். இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் குரல் எழுப்பி வருகின்றனர். மறுபுறம் ஆளுநருக்கு ஆதரவாக பாஜகவினர் குரல் கொடுத்து வருகின்றனர். ஆளுநர், அரசின் அறிக்கையை அப்படியே படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், முதல்வர் ஸ்டாலின் தான் மரபை மீறிச் செயல்பட்டு ஆளுநரை அவமதித்துவிட்டார் என்றும் பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது ஒண்ணும் புதுசு இல்ல
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினின் நடவடிக்கை குறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். ஆளுநர் உரையின் போது அவர் மட்டுமே பேச வேண்டும் என்பது மரபு. ஆனால் அதற்கு மாறாக முதல்வர் பேசியது மரபு அல்ல. இந்த மாதிரி ஏற்கத்தகாத விஷயங்களை ஆளுநர் படிக்காமல் தவிர்ப்பது என்பதும் புதிதான ஒன்று அல்ல. ஏற்கனவே கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இதே மாதிரி ஆளுநர்கள் பேசியுள்ளனர். ஆளுநர் ஊழல் அரசாங்கத்தை பற்றி தனது பேச்சில் கூறாமல் தவிர்த்து விட்டு சென்றதற்கு முதலமைச்சரே ஆளுநருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

மீண்டும் நிரூபணம்
ஔவையார், பாரதியார் கவிதைகளை ஆளுநர் வாசித்தது சபையின் அவை குறிப்பில் இருக்காது என்கிறார்கள். இதுதான் திராவிட மாடல் அமைதி பூங்கா அரசா? தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் முதிர்வில்லாத முதலமைச்சர் என்பது மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது. தன்னுடைய நடவடிக்கைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்பார். தன்னைத் திருத்திக் கொள்வார் என நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ஆட்சி
மேலும், சட்டசபையில் தேசிய கீதம் பாடும்போது ஆளுநர் அந்த இடத்திலேயே இல்லை. அதற்கு முன்னரே கிளம்பிச் சென்று விட்டார். எனவே தேசிய கீதத்தை மதிப்பது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பாடம் எடுக்க வேண்டாம். தமிழ்நாட்டில் முழுமையாக குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வரவேண்டியதில்லை. குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வரலாம்.

பின் விளைவுகள் மோசமா இருக்கும்
மேலும், தனித்தமிழ்நாடு குறித்து ஏற்கனவே பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஒரு தேச துரோகி. வரம்பு மீறி பேசினால் பின்விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் திருமாவளவனை முதல்வர் கைது செய்ய வேண்டும். நான் ஏற்கனவே "ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதி" என போன வருடமே சொன்னதை தற்போது ஸ்டாலின் நிரூபித்து வருகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications