பிரியா மரணம் தாங்க முடியாத துயரம்..விளையாட்டு துறைக்கு இழப்பு.. எதுவுமே ஈடாகாது..முதல்வர் ட்வீட்
சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் பிரியாவின் உயிர்க்கு ஈடாகாது என முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரியா. சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். கால்பந்து போட்டிகளில் அதிகம் ஆர்வம்கொண்ட பிரியா, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மூட்டுவலி காரணமாக கொளத்தூர், பெரியார் நகரிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவரைப் பரிசோதித்த அரசு மருத்துவர்கள், பிரியாவின் வலது கால் மூட்டுப்பகுதியில் ஜவ்வு விலகியிருப்பதாகத் தெரிவித்து அறுவை சிகிச்சை செய்தனர்.

பிரியா கால் அகற்றம்
அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரியாவின் காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்ச்சியற்றதாக இருந்தது. இதனால், அவர் உடனே சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பிரியாவின் காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டு இருப்பதைக் கண்டு, உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, உடனடியாக அறுவை சிகிச்சை செய்து வலது காலை அகற்றியிருக்கிறார்கள். பிரியாவின் முதற்கட்ட சிகிச்சையில் கவனக்குறைவாக செயல்பட்ட இரண்டு மருத்துவர்களையும் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், பிரியா இரு தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்
பிரியாவின் இறப்புக்கு தவறான சிகிச்சை முறையே காரணம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மேலும் இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதோடு பிரியாவுக்கு சிகிச்சை வழங்கி இறுக்கமாக கட்டு போட்ட 2 டாக்டர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் தான் இன்று காலை சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரியாவின் வீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பிரியாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அரசு வேலைக்கான அரசாணை
பிரியாவின் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த அவரது படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி, அரசு சார்பில் வீடு, பிரியாவின் அண்ணனுக்கு அரசு வேலைக்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மேலும் பிரியா பற்றிய விபரங்களை குடும்பத்தினரிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

முதல்வர் ஸ்டாலின் ட்வீட்
சென்னையில் பிரியாவின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிவிட்டு வீடு வழங்கும் ஆணையை வழங்கிய பிறகு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம் என்று தெரிவித்துள்ளார். ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான பிரியா மரணம் அவரது குடும்பம், விளையாட்டுத்துறைக்கும் மாபெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் பிரியாவின் உயிர்க்கு ஈடாகாது என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம் -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications