சென்னை மாநகராட்சியில் 1000% உயர்ந்த சொத்து வரி.. ஸ்கிரீன்ஷாட்டுடன் நெட்டிசன் சரமாரி கேள்வி
சென்னை: சென்னை மாநகராட்சியில் வசிக்கும் ஒருவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், " சென்னை மாநகராட்சிக்கு வணக்கம், எனது சொத்து வரி, அரையாண்டிற்கு ₹585 என்ற அளவிலிருந்து (2025-26 ஆம் ஆண்டின் முதல் அரை பகுதி வரை), திடீரென ₹6,670 ஆக உயர்ந்துள்ளது (2025-26 ஆம் ஆண்டின் இரண்டாவது அரை பகுதியிலிருந்து). இது 1,000 சதவீதத்திற்கும் அதிகமான (10 மடங்கு) உயர்வு ஆகும்.
எனது சொத்தின் ஆண்டு மதிப்பீடு இப்போது ₹53,752 எனக் காட்டுகிறது. இந்தத் திடீர் மதிப்பீட்டிற்கான அடிப்படைக் காரணம் என்ன? இவ்வளவு பெரிய உயர்வுக்கு என்னென்ன காரணிகள் வழிவகுத்தன என்பதை தயவுசெய்து விளக்கவும். சென்னை மாநகராட்சி ஏன் திடீரென எனது சொத்தின் ஆண்டு மதிப்பீட்டைத் தோராயமாக ₹4,700-லிருந்து ₹53,752 ஆக உயர்த்தியது? என் வாழ்நாளில் இப்படி ஒரு உயர்வை நான் பார்த்ததே இல்லை. இணைக்கப்பட்டுள்ள ஸ்கிரீன்ஷாட்களைப் பாருங்கள். இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது!" இவ்வாறு கூறியுள்ளார்.

11 மடங்கு உயர்வு
அவர் இணைத்த ஸ்கிரீன்ஷாட்டை பார்த்த போது, 2020 முதல் 2025 வரை அரையாண்டு வரி வெறும் ₹428 முதல் ₹585 வரை மட்டுமே படிப்படியாக உயர்ந்து மிகவும் சீராக இருந்திருப்பது தெரிகிறது.ஆனால் 2025-26 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் 11 மடங்கு உயர்ந்துள்ளது. ஒரே அடியாக ₹585-லிருந்து ₹6,670 ஆக மாறி உள்ளது.
1000 சதவீதம் அதிகம்
இதனிடையே இந்தத் திடீர் உயர்த்தப்பட்ட தொகைகள் மற்றும் முந்தைய நிலுவைகளுடன் சேர்த்து மொத்தத் தேவைத் தொகை ₹27,647.00 ஆக மாறி உள்ளது. அதேபோல் அவர் இணைத்த இரண்டாவது ஸ்கிரீஷ்ஷாட்டில் ₹6,085 எனக் காட்டுகிறது! அவர் ஏற்கனவே செலுத்திய ₹585-ஐக் கழித்து மீதித் தொகையைக் காட்டுகிறதா அல்லது சிஸ்டமே குழம்பியதா என்று தெரியிவல்லை...
Hi @chennaicorp @sameerangs My property tax has suddenly increased from ₹585 per half-year (I/25-26) to ₹6,670 per half-year from II/25-26.
— Srini Swaminathan (@srini091) August 12, 2026
This is an increase of over 1,000% 😱
The Annual Value now shows ₹53,752. Please explain the basis for this reassessment and the… pic.twitter.com/b6gYMamwkA
அதேபோல் அந்த ஸ்கிரீன்ஷாட்டில் 2026-27 முதல் 2031-32 வரை வரவிருக்கும் அடுத்தடுத்த அனைத்து அரையாண்டுகளுக்கும் தவறாமல் ₹6,670 என்று வரியை நிர்ணயம் செய்திருப்பது போல் தெரிகிறது. ன் ஆன்லைன் சிஸ்டம் மற்றும் மறுமதிப்பீட்டு அல்காரிதம் எவ்வளவு குளறுபடியாக இயங்குகிறது என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது. அவர் வரி செலுத்திய பிறகும், "மறுமதிப்பீடு" என்ற பெயரில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான வரியை 10 மடங்கு அதிகரித்திருப்பது போல் காட்டுகிறது.இதனால் தான் அந்த நெட்டிசன் கொந்தளித்துள்ளார்.
என்ன பிரச்சனை
சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சொத்து உரிமையாளர்கள் வழங்கிய விவரங்கள் மற்றும் கிடைக்கப்பெற்ற மறுமதிப்பீடு, புவிசார் தகவல் அமைப்பு, செயற்கைக்கோள் படத் தரவுகளின் அடிப்படையில் சொத்துவரி மதிப்பீடுகளைத் திருத்தும் பணியை தற்போது சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில், சொத்துவரி மதிப்பீடானது சொத்தின் சரியான பயன்பாடு மற்றும் கட்டிடப் பரப்பளவை உறுதி செய்வதற்கும், அனைத்து சொத்துகளிலும் நியாயமான மற்றும் சரியான மதிப்பீட்டை உறுதி செய்வதற்கும் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சேபணை தெரிவிக்கலாம்
சென்னை மாநகராட்சி சார்பில் திருத்தப்பட்ட சொத்துவரி மதிப்பீடு தொடர்பாக ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சொத்துவரி மதிப்பீட்டு திருத்தம் குறித்து ஏதேனும் குறைபாடுகள் அல்லது ஆட்சேபனைகள் இருந்தால், சொத்து உரிமையாளர்கள் திருத்தப்பட்ட வரி மதிப்பீட்டு ஆணையைப் பெற்ற தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார துணை கமிஷனரிடம் தங்களது ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கலாம். அதை சென்னை மாநகராட்சி பரிசீலனை செய்து, ஒரு மாத காலத்திற்குள் தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
