சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10 முதல் 12 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு

Google Oneindia Tamil News

Recommended Video

    10 முதல் 12 வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு- வீடியோ

    சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. முதல் பிளஸ்-2 வரை உள்ள வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 14-ந்தேதி முதல் தொடங்க உள்ளன. இதே போல், பிளஸ்-1 தேர்வு மார்ச் 6-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடக்க உள்ளது. பிளஸ்-2 தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்கி 19-ந் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

    இதுகுறித்து, அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

    10-ம் வகுப்பு தேர்வு அட்டவணை

    மார்ச் 14-ந்தேதி (வியாழக்கிழமை) - தமிழ் முதல் தாள்

    18-ந்தேதி (திங்கட்கிழமை) - தமிழ் இரண்டாம் தாள்

    20-ந்தேதி (புதன்கிழமை) - ஆங்கிலம் முதல் தாள்

    22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) - ஆங்கிலம் இரண்டாம் தாள்

    23-ந்தேதி (சனிக்கிழமை) - விருப்ப மொழிப்பாடம்

    25-ந்தேதி (திங்கட்கிழமை) - கணிதம்

    27-ந்தேதி (புதன்கிழமை) - அறிவியல்

    29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) - சமூக அறிவியல்

    தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்வுகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரையில் நடக்கும் என்றும், மற்ற தேர்வுகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரையிலும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    +1 தேர்வு அட்டவணை

    +1 தேர்வு அட்டவணை

    புதிய பாடத்திட்டத்தின்படி வழக்கமாக தேர்வு எழுதுபவர்களுக்கு காலஅட்டவணை பின் வருமாறு : (அடைப்புக்குறிக்குள் கடந்த ஆண்டு பழைய பாடத்திட்டத்தின்படி படித்து தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான காலஅட்டவணை)

    மார்ச் 6-ந்தேதி (புதன்கிழமை) - தமிழ் (தமிழ்)

    8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) - ஆங்கிலம் (ஆங்கிலம்)

    12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) - ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ், வேளாண் அறிவியல், நர்சிங்(பொது), நர்சிங்(தொழிற்கல்வி) (கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை மற்றும் குழந்தைகள் பராமரிப்பு, வேளாண் பயிற்சி, நர்சிங்(பொது), நர்சிங் (தொழிற்கல்வி)

    14-ந்தேதி (வியாழக்கிழமை) - இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி (இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினஸ்ட் தேர்வு-1, எலக்ட்ரானிக் உபகரணங்கள், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி), சிவில் வரைவாளர், எலக்ட்ரிகல் மெஷினஸ் மற்றும் உபகரணங்கள் தேர்வு-1,

    18-ந்தேதி (திங்கட்கிழமை) - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ரிகல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், அடிப்படை சிவில் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செகரட்டரிஷிப் (உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், ஜெனரல் மெஷினிஸ்ட் தேர்வு-2, எலக்ட்ரிகல் மெஷினஸ் மற்றும் உபகரணங்கள் தேர்வு-2, மேனேஜ்மென்ட் பிரின்சிபில்ஸ் மற்றும் டெக்னிக்ஸ், மேனேஜ்மென்ட் பிரின்சிபில்ஸ்)

    20-ந்தேதி (புதன்கிழமை) - வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் (வேதியியல், கணக்கு பதிவியல், தொழிற்கல்வி கணக்கு பதிவியல் தேர்வு, புவியியல்)

    22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) - கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி(தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் (கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், நெறிமுறைகள், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி(தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்)

    இந்த தேர்வுகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரையில் நடைபெறுகிறது.

    +2 தேர்வு அட்டவணை

    +2 தேர்வு அட்டவணை

    மார்ச் 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) - தமிழ்

    5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) - ஆங்கிலம்

    7-ந்தேதி (வியாழக்கிழமை) - கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை மற்றும் குழந்தை பராமரிப்பு, வேளாண் பயிற்சி, நர்சிங்(பொது), நர்சிங்(தொழிற்கல்வி)

    11-ந்தேதி(திங்கட்கிழமை) - இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக் உபகரணங்கள், சிவில் வரைவாளர், எலக்ட்ரிகல் மெஷினஸ் மற்றும் உபகரணங்கள், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.

    13-ந்தேதி(புதன்கிழமை) - வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்

    15-ந்தேதி(வெள்ளிக்கிழமை) - கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி(தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.

    19-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை கோட்பாடு.

    நேரம் குறைப்பு

    நேரம் குறைப்பு

    இந்த பாடங்களுக்கு புதிய முறைப்படி வழக்கம்போல் தேர்வு எழுதுபவர்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரையிலும், ஏற்கனவே இந்த பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு பழைய முறைப்படி காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரையிலும் (தமிழ், ஆங்கிலம் பாடங்களை தவிர) தேர்வு நடைபெறும்.

    English summary
    The Government Examination Department has issued public Exam dates for Classes SSLC To Plus -2
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X