10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் அறைகளில் சிசிடிவி கட்டாயம் - தேர்வுத்துறை அதிரடி
10,11,12 ஆம் வகுப்பு வினாத்தாள்களை வைக்கும் அறைகளில் சிசிடிவி கேமிரா பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை: 10,11,12 ஆம் வகுப்பு வினாத்தாள்களை வைக்கும் அறைகளில் சிசிடிவி கேமிரா பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இரட்டை பூட்டுக்கொண்டு வினாத்தாள் கட்டுகள் இருக்கும் அறைகள் பூட்டப்பட்டிருக்க வேண்டும் எனவும் அரசுத்தேர்வுத்துறை இயக்கவும் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 12ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. உடனுக்குடன் வேறு கேள்விகள் தயார் செய்யப்பட்டு தேர்வுகள் நடைபெற்றன. இந்த நிலையில் பொதுத் தேர்வு வினாத்தாள் வைக்கும் அறைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மே மாதம் இறுதித்தேர்வு நடைபெறவுள்ளது. இதனால் தற்போது பிளஸ்1, பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது.

வினாத்தாள் கசிவு
ஏற்கனவே நடைபெற்ற முதல் திருப்புதல் தேர்விலும் 10, 12 ஆம் வகுப்பு வினாத்தாள்கள் தேர்விற்கு முன்னதாக கசிந்த சம்பவம் பரபரப்பான நிலையில் மீண்டும் 2ம் கட்ட திருப்புதல் தேர்வில் வினாத்தாள் கசிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 12 ஆம் வகுப்பு இராண்டாம் திருப்புதல் தேர்வில் கணித தேர்விற்கான வினாத்தாள் கசிந்தது.

பொதுத்தேர்வு
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தற்போது வினாத்தாள் வெளியாகியிருப்பது பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் விசாரணை நடந்து வருகிறது. தொடர்ந்து, புதிய வினாத்தாளை வைத்து 12 ஆம் வகுப்பு கணித தேர்வு நடைபெற்றது. மேலும் இதுபோன்ற சம்பவம் இனி நடக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்தார். மேலும் திருப்புதல் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

சிசிடிவி கேமரா
இதனிடையே தற்போது 10,11,12 ஆம் வகுப்பு வினாத்தாள்களை வைக்கும் கட்டுப்பாடு மையங்களில் சிசிடிவி கேமிரா பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள வழிக்காட்டு நெறிமுறையில், வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்களில் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு, அது செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

இரட்டை பூட்டுக்கள் அவசியம்
தொடர்ந்து காவலர் பணியில் இருக்க வேண்டும். மேலும் இரட்டை பூட்டுக்கொண்டு வினாத்தாள் கட்டுகள் இருக்கும் அறைகள் பூட்டப்பட்டிருக்க வேண்டும். பொதுத்தேர்வு மையங்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கண்காணிப்பாளராக இருக்க கூடாது. அரசு பள்ளி ஆசிரியர்களே தேர்வு பணியில் ஈடுப்படுத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications