விடவே மாட்டோம்.. ராகுல் தான் அடுத்த தலைவர்.. தமிழக காங்கிரஸ் பொதுக்குழுவில் ஏகமனதாக தீர்மானம்!
சென்னை: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இன்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவில் உள்ள பல மாநில மக்களிடம் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை இழந்து வருகிறது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் இருந்து காங்கிரஸ் கட்சி பல்வேறு தேர்தலில் பின்னடைவை சந்தித்து வருகிறது.
மேலும் காங்கிரஸ் கட்சியின் உள்ள எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைவது, மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்து பிற கட்சிகளில் சேர்வது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இக்கட்டான நிலையில் காங்கிரஸ்
இத்தகைய பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் விஷயத்திலும் பெரும் குழப்பம் உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்த அவரது தாயார் சோனியா காந்தி இடைக்கால தலைவராக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் அவர் தற்போது முன்பு போல் தீவிர களஅரசியலில் இல்லை. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தான் அரசியல் களத்தில் உள்ளனர். இந்த சூழலில் தான் காங்கிரஸ் கட்சி மக்கள் செல்வாக்கை பெற்று மீண்டும் தேர்தல் அரசியலில் சாதித்து காட்ட வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளது.

உள்கட்சி தேர்தல்
இதனை செய்து காட்டும் நிலையில் தான் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 150 நாட்கள் 3,500 கிலோமீட்டர் வரை பாரத் ஜோடோ யாத்திரையை துவங்கி உள்ளார். தமிழகத்தில் துவங்கிய யாத்திரை தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான உள்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி முழுமையாக தயாராகி வருகிறது.

சென்னையில் பொதுக்குழு கூட்டம்
இதற்கிடையே தான் இன்று சென்னையில் வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி தலைமை வகித்தார். கட்சியின் மூத்த தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ராகுல்காந்தியின் நடைப்பயணம், உள்கட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ராகுல் தலைவராக தீர்மானம்
அதன்படி காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல்காந்தியை தேர்வு செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை மாநில தலைவர் கேஎஸ் அழகிரி முன்மொழிந்தார். இந்த தீர்மானம் ஏகமனதாக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க கோரி ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. அதன்பிறகு சட்டீஸ்கர், பீகார் உள்பட இந்தியாவின் பிற மாநிலங்களில் தீர்மானங்கள் நிறைவற்றப்பட்டு வரும் நிலையி்ல தான் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு












Click it and Unblock the Notifications