சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, தஞ்சை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அது போல் சென்னையில் முகப்பேர், அண்ணாநகர், அம்பத்தூர், கோயம்பேடு, வடபழனி, விமான நிலையம், அனகாபுத்தூர், பல்லாவரம், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது.












Click it and Unblock the Notifications