மக்களே உஷார்.. அடுத்த 3 மணி நேரங்களுக்கு இந்த மாவட்டங்களில் இடியுடன் மழை வெளுக்கும்: வானிலை மையம்
சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சில இடங்களில் மழை மிகவும் அதிகமாக பதிவாகி வருகிறது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதை பாருங்கள்:

3 மணி நேரம்
அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

மாவட்டங்கள்
இதேபோல மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சை, கரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மற்றும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

வானிலை மையம்
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்று, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்தான் மாவட்ட நிர்வாகங்கள் அந்தந்த மாவட்டங்களில் நிலவரத்தைப் பொறுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.

மக்களே உஷார்
அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

முன்னெச்சரிக்கை
இடி மின்னல் போன்றவை தாக்கும் நேரங்களில் மரங்கள் அல்லது உயரமான பொருட்களுக்கு கீழே நிற்கக்கூடாது. பழைய மற்றும் பாழடைந்த கட்டிடங்களில், தஞ்சமடைய கூடாது. நல்ல நிலையில் இருக்கக்கூடிய கட்டிடங்களுக்கு உள்ளே மழை இடி மின்னல் போன்றவை இருக்கும் போது மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் திரும்பத்திரும்ப எச்சரித்து உள்ளது. அதேபோல வீட்டில் உள்ள சுவிட்ச் போட்டு போன்ற இடங்களில் தண்ணீர் புகுந்து இருக்க வாய்ப்பு இருப்பதால், ரப்பர் செருப்பு அணிந்து கொண்டு தண்ணீர் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு மின்சாதன பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications