என்றுமே ராஜா நீ ரஜினி.. திரையுலகில் 50 ஆண்டுகள்! சூப்பர் ஸ்டாருக்கு குவிந்த பிரபலங்களின் வாழ்த்து
சென்னை: சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டு பயணத்தை நிறைவு செய்கிறார். 170-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, இசையமைப்பாளர் அனிருத், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
'சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்' என்பது வெறும் பாடல் மட்டும் அல்ல. 50 ஆண்டுகளாக சினிமா துறையில் தனிப்பெரும் ராஜாவாக வளம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்துக்கு என்று எழுதப்பட்டது இந்த வரிகள்.
ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் நடிகர் ரஜினிகாந்த் சினிமா துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது. அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முடிசூடா நாயகனாக வளம் வரும் ரஜினிகாந்த் பல தலைமுறை நடிகர்களை பார்த்து விட்டார்.

ரஜினிகாந்த்
எம்ஜிஆர், சிவாஜி, கமலஹாசன், பிரபு, மோகன், ராமராஜன், விஜயகாந்த், சத்யராஜ், விஜய், அஜித் தொடங்கி தற்போது சிவகார்த்திகேயன் வரை வருடம் தோறும் புது புது நடிகர்கள் வலம் வந்தாலும், சூப்பர் ஸ்டார் அரியணை எப்போதும் ரஜினிகாந்துக்குத்தான்.
சூப்பர் ஸ்டார்
கமலஹாசன் உடன் அவர் சேர்ந்து நடித்த அபூர்வராகங்கள் திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி 1975 ஆம் ஆண்டு வெளிவந்தது. கே.பாலச்சந்தர் மூலம் சினிமா துறையில் கால் எடுத்து வைத்த ரஜினிகாந்த் எஸ்.பி.முத்துராமன், பஞ்சு அருணாச்சலம், கேஎஸ் ரவிக்குமார், சுரேஷ் கிருஷ்ணா என பல இயக்குநர்கள் உடன் பணியாற்றி தற்போது லோகேஷ் கனகராஜ் வரை பயணித்து வருகிறார். அவரது நடிப்பில் கூலி திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.
பொன்விழா
அத்துடன் 50 ஆண்டு திரை பயணத்தையும் நிறைவு செய்கிறார். இதை அடுத்து ரஜினிகாந்துக்கு அரசியல் பிரபலங்களும் திரை கலைஞர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை ரஜினிகாந்த்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இசையமைப்பாளர் அனிருத் நடிகரும் மாநிலங்களவை எம்பியுமான கமலஹாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,"திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும் தனித்துவமான நடிப்பாலும், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், சகோதரர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், இப்பொன்விழா ஆண்டில் #Superstar நடிப்பில் நாளை வெளியாகவுள்ள #Coolie திரைப்படம் வெற்றியடையவும் என்னுடைய வாழ்த்துகள்" என கூறியுள்ளார்.
திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும்
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) August 13, 2025
தனித்துவமான நடிப்பாலும்,
50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், சகோதரர்
திரு. @rajinikanth அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன்,
இப்பொன்விழா ஆண்டில் #Superstar நடிப்பில் நாளை வெளியாகவுள்ள… pic.twitter.com/6DXVh2xakm
அனிருத்
இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "50 வருடங்கள், ஒரு அரியணை, ஒரே ஆள்" என பதிவிட்டுள்ளார்.
50 years . 1 throne. 1 man.
— Anirudh Ravichander (@anirudhofficial) August 13, 2025
Let us all celebrate the golden jubilee of Thalaivar Superstar @rajinikanth with #Coolie from tomo 🔥
With the blessings of the almighty and the love from all of you 🙏🏻 pic.twitter.com/t8Jxz3spou
கமல்ஹாசன்
நடிகரும் மாநிலங்களை எம்பியுமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்," சினிமாவின் அரை நூற்றாண்டைக் குறிக்கும் என் அன்பு நண்பர் ரஜினிகாந்த் இன்று திரையுலகில் 50 ஆண்டுகளை கொண்டாடுகிறார். சூப்பர் ஸ்டாரை அன்புடனும் போற்றுதலுடனும் கொண்டாடுகிறேன், மேலும் இந்த பொன்விழாவிற்கு ஏற்றவாறு கூலி உலகளவில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
Marking half a century of cinematic brilliance, my dear friend @rajinikanth celebrates 50 glorious years in cinema today. I celebrate our Super Star with affection and admiration, and wish #Coolie resounding global success befitting this golden jubilee.
— Kamal Haasan (@ikamalhaasan) August 13, 2025
Helmed by the powerhouse… pic.twitter.com/FrU5ytphoL
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications