மழை தூறலுக்கு மத்தியில்.. வீட்டின் முன் குவிந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!
சென்னை: நாடு முழுதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு குவிந்திருந்த ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறினார் நடிகர் ரஜினிகாந்த்.
சென்னை போயஸ் கார்டனில் வசித்து வரும் நடிகர் ரஜினிகாந்த்தை காண, அவரது வீட்டு முன்பு ரசிகர்கள் திரண்டிருந்தனர். காலையிலேயே வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களை வீட்டின் வெளியே வந்து ரஜினி சந்தித்தார். அப்போது, கையெடுத்து கும்பிட்டபடி, அவர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். கொட்டும் மழையிலும் காத்திருந்து ரஜினியிடம் ரசிகர்கள் வாழ்த்து பெற்றனர்.

பண்டிகை நாட்களில், நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டின் வெளியே திரண்டிருக்கும் ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அந்தவகையில், தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன்பு இன்று காலை முதலே ரசிகர்கள் ஏராளமானோர் கூடினர்.
தனது வீட்டின் முன்பாக திரண்ட ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கையசைத்து வாழ்த்துக் கூறினார். இன்று காலை தனது வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த், வீட்டின் வெளியே காத்திருந்த ரசிகர்களைப் பார்த்து கைகளை அசைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
கொட்டும் மழையிலும் காத்திருந்து ரஜினியிடம் ரசிகர்கள் வாழ்த்து பெற்றனர். மழை பெய்வதால், நனைந்து விடாமல் ரசிகர்களை கிளம்பிச் செல்லுமாறு சைகையில் கூறினார் ரஜினிகாந்த்.


Click it and Unblock the Notifications
