சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடங்காத சலசலப்பு... நீக்கியவர்களை சேர்க்கலாமா... ரஜினி அவசர ஆலோசனை!

Google Oneindia Tamil News

சென்னை : ரஜினி மக்கள் மன்றத்தினருடன் ரஜினிகாந்த் சென்னையில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீக்கப்பட்ட நிர்வாகிகளால் மன்றத்தில் சலசலப்பு ஏற்படுவதால் அவர்களை மீண்டும் மன்றத்தில் இணைத்துக் கொள்ளலாமா என்பது குறித்து விவாதிக்கப்படுவதாக தெரிகிறது.

ரஜினி மக்கள் மன்றத்தின் கட்டுப்பாடுகளை மீறி ஊடகங்களில் விவாதங்களில் பங்கேற்ற 15 பேரை அகில இந்திய ரஜினி காந்த் ரசிகர் மன்றத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 3 தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த் ஒழுங்கு நடவடிக்கை அனைத்தும் தனது பார்வைக்கு வந்த பின்னரே செயல்பாட்டுக்கு வருவதாக தெரிவித்திருந்தார். அரசியலில் மாற்றம் செய்யவே தான் விரும்புவதாக காட்டமாக ரஜினிகாந்த் கூறி இருந்தார்.

Rajinikanth holds emergency meeting with fans club administrators

ரஜினிகாந்தின் காட்டமான அறிக்கையால் ரசிகர் மன்றத்தினர் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்ததாக தெரிகிறது. மேலும் நீக்கப்பட்ட நிர்வாகிகளால் மன்றத்தில் பூசல் ஏற்படலாம் என்பதாலும் அவர்களை மீண்டும் மன்றத்தில் சேர்த்துக் கொள்வது பற்றி ரஜினி ஆலோசித்து வருவதாக தெரிகிறது. மேலும் இடைத்தேர்தல் நடக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில் கட்சி தொடங்காமல் இழுபறி நிலையில் இருப்பது குறித்தும் நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

தகுதி நீக்க தீர்ப்பு.. 18 ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் மதுரையில் ஆலோசனை! தகுதி நீக்க தீர்ப்பு.. 18 ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் மதுரையில் ஆலோசனை!

English summary
Rajinikanth holds emergency meeting with fan club functionaries to shortout issues related to expelled members
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X