நியூ இயர் கொண்டாட்டத்தோடு அரசியலும் பேசும் ரஜினி.. அமெரிக்காவில் முக்கிய பிரமுகருடன் சந்திப்பு?!
நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றதற்கு பின் சில அரசியல் காரணங்களும் இருப்பதாக தகவல்கள் வருகிறது.
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றதற்கு பின் சில அரசியல் காரணங்களும் இருப்பதாக தகவல்கள் வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் முக்கிய அரசியல் அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது. அதேமாதம் அவர் தன்னுடைய தொலைக்காட்சியை திறக்க இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
இதற்காக ஏற்கனவே மூன்று பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்க அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வருகிறது.

அமெரிக்கா சென்றார்
நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா சென்றார். அவர் புத்தாண்டு முடியும் வரை நியூயார்க்கில் இருப்பார் என்று கூறப்படுகிறது. ஜனவரி மாத தொடக்கத்தில் அவர் மீண்டும் தமிழகம் வர உள்ளார்.

இன்னொரு நபர்
அதேபோல் தேசிய கட்சி ஒன்றின், முக்கிய மாநில நிர்வாகி ஒருவர் அமெரிக்கா செல்ல உள்ளார். நடிகர் ரஜினிகாந்திற்கு நெருக்கமான அரசியல்வாதியான அவரும் நியூயார்க்கில்தான் இருக்க போகிறார். நாளை அமெரிக்கா செல்லும் அந்த முக்கிய பிரமுகர் ஜனவரி 6ம் தேதி வரை அமெரிக்காவில் இருப்பார் என்று கூறப்படுகிறது.

பேச உள்ளனரா?
ரஜினிகாந்த் இந்த ஜனவரியில் அரசியல் அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ரஜினி அமெரிக்காவில் அந்த முக்கிய பிரமுகருடன் அரசியல் கூட்டணி குறித்து பேச வாய்ப்புள்ளதா? என்று கேள்வி எழுந்து இருக்கிறது. வரிசையாக அடுத்தடுத்த அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏப்ரல் கணக்கு
அடுத்த வருடம் நடக்க உள்ள லோக் சபா தேர்தல் மே மாதம் இல்லாமல் அதற்கு முன்னதாக வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. ஏப்ரல் மாதமே தேர்தல் நடக்க வாப்புள்ளதாக கூறுகிறார்கள். அதனால், ரஜினி கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தி உள்ளாரா என்று கேள்விகள் எழுந்துள்ளது.. அமெரிக்காவில் இருந்து திரும்பி வரும் ரஜினி அரசியல்வாதி ரஜினியாக வருவாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications