சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெய்பீம்-க்கு எதிராக தொடரும் சர்ச்சை- ராஜ்புத் கர்னி சேனா எச்சரிக்கை- இந்தியில் கண்டன வீடியோ!

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்துக்கு எதிர்ப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அகில இந்திய அளவிலான அமைப்புகளில் ஒன்றான ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் மகிபால் சிங் மகாராணா, ஜெய்பீம் படத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அத்துடன் இந்தியில் கண்டனம் தெரிவித்து வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

Recommended Video

    JaiBhim-க்கு எதிராக Rajput Karni Sena | Oneindia Tamil

    ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் சூர்யாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    சூர்யாவை ஞாபகம் இருக்கா.. பதவியேற்ற அடுத்த செகண்டே கைதானாரே விஜயலட்சுமி.. இப்ப ஒரு புது தகவல்சூர்யாவை ஞாபகம் இருக்கா.. பதவியேற்ற அடுத்த செகண்டே கைதானாரே விஜயலட்சுமி.. இப்ப ஒரு புது தகவல்

     ரூ5 கோடி நோட்டீஸ்

    ரூ5 கோடி நோட்டீஸ்

    இதற்கு நடிகர் சூர்யாவும் பதில் அனுப்பி இருந்தார். இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய அக்னி கலச காலண்டர் மாற்றப்பட்டது. பின்னர் நடிகர் சூர்யா ரூ5 கோடி நஷ்ட ஈடு தரக் கோரி வன்னியர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் ஜெய்பீம் திரைப்படத்துக்கு எந்த விருதும் தரக் கூடாது எனவும் மத்திய அரசுக்கு வன்னியர் சங்கம் கடிதம் அனுப்பியது.

     போலீசில் பரஸ்பரம் புகார்

    போலீசில் பரஸ்பரம் புகார்

    மேலும் நடிகர் சூர்யாவை தாக்கினால் ரூ1 லட்சம் தரப்படும் என பாமகவின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வன்முறையை தூண்டும் வகையில் கடிதம் எழுதிய அன்புமணி ராமதாஸை கைது செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் சார்பிலும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இயக்குநர் ஞானவேல், ஜெய்பீம் படம் தொடர்பாக விளக்கம் கொடுத்திருந்தார். இதனால் பிரச்சனை முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

     ராஜ்புத் கர்னி சேனா தலையீடு

    ராஜ்புத் கர்னி சேனா தலையீடு

    இந்த நிலையில் வட இந்திய அமைப்பான ராஜ்புத் கர்னி சேனா, ஜெய்பீம் விவகாரத்தில் தலையிட்டுள்ளது. அந்த இயக்கத்தின் தலைவரான மகிபால் சிங் மகாராணா வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெய்பீம் படத்தில் ஷத்ரியர்களை வில்லனாக சித்தரித்துள்ளனர். கதாநாயகன், பாதிக்கப்பட்டவர், போலீஸ் அதிகாரி ஆகிய கதாபாத்திரங்களுக்கு நிஜப் பெயரையும் வில்லன் கதாபாத்திரத்துக்கு உண்மை பெயரை மறைத்து ஷத்ரியரை சித்தரித்து உள்ளனர். அதுவும் பிரபலமான ஷத்ரியர்களின் தலைவரான குருவின் பெயரை வில்லன் பாத்திரத்துக்கு வைத்திருக்கின்றனர். இது 25 கோடி ஷத்ரியர்களை புண்படுத்தி உள்ளது. தேவையில்லாமல் ஷத்ரியர்களை இழிவுபடுத்தியது வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆகையால் நடிகர் சூர்யாவும் படக் குழுவினரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.

    இந்தி கண்டன வீடியோ

    மேலும் இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வணக்கம் என தமிழும் இடம் பெற்றுள்ள அந்த இந்தி வீடியோவில் ஜெய்பீம் படத்துக்கு மகிபால் சிங் மகாராணா கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெய்பீம் படம் தொடர்பான சர்ச்சை கடந்த 20 நாட்களுக்கு மேலாக நீடித்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Rajput Karni Sena has opposes to Actor Suriya's Jai Bhim Movie.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X