திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீம் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி.. வேட்பாளரும் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீம் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ்கனி எம்பி போட்டியிடுவதாக காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. லோக்சபா தேர்தலை சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி அமைப்பது தொகுதி பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகளுடன் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி மற்றும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணி என லோக்சபா தேர்தலை சந்திக்கின்றன.

Ramanathapuram Loksabha seat allocates to Indian Union Muslim League party in DMK alliance

இதில், கடந்த முறை போல திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் லோக்சபா தேர்தலை சந்திக்கிறது. அதன்படி கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதி கொடுக்க வேண்டும் என்றும் எந்தெந்த தொகுதி என்றும் அக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று இந்திய முஸ்லீம் லீக் கட்சி திமுக பேச்சுவார்த்தை நடந்தது.

பேச்சுவார்த்தை பின்னர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதாவது ராமநாதபுரம் லோக்சபா தொகுதியை இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் காதர் மொய்தீன் கையெழுத்து இட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காதர் மொய்தீன் கூறியதாவது:- "ஒரு மாநிலங்களவை சீட் கேட்டு இருக்கிறோம். திமுக கூட்டணியில் எங்களுக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ்கனி எம்பி போட்டியிடுகிறார்" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+