ரத்தன் பண்டிட் மட்டுமல்ல.. ஆதவ் அர்ஜுனாவும் ஆபத்தானவர்? தவெக பற்றி சேகுவேரா சொன்ன பகீர் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள ஜோதிடர் ரத்தன் பண்டிட்டின் நடவடிக்கைகள் மற்றும் தவெக கட்சியின் உள்விவகாரங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றில் விரிவாக பேசியிருக்கிறார்.. "ரத்தன் பண்டிட்டைப் போலவே ஆதவ் அர்ஜுனாவும் எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டியவர் ஆவார். ஆதவ் அர்ஜுனாவின் கடந்த கால அரசியல் தடங்கள் மற்றும் எந்தக் கட்சியிடமும் உறுதியான விசுவாசம் காட்டாத போக்குகள் கவலை அளிக்கின்றன" என்றும் அந்த பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார்.

The Gentleman சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "தமிழக அரசு அமைவதற்கும் விஜய் முதலமைச்சர் ஆவதற்கும் நான்தான் காரணம் என்று ஜோதிடர் ரத்தன் பண்டிட் சொன்னது முற்றிலும் பொய்யானது. கடந்த காலத்தில் ஜெயலலிதாவிடம் ஜோதிடராக பணியாற்றிய இவருடைய பின்னணி அனைவருக்கும் தெரியும்.

Rathan Pandit Controversy

ரத்தன் பண்டிட்

விஜய் ஜோதிடத்தை முழுமையாக நம்பும் வழக்கம் இல்லாதவராக இருந்தாலும், ஓரளவு ஜாதகம் மற்றும் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டவராக இருக்கக்கூடும்.

ஆனால், தேர்தல் வெற்றிக்கு பிறகு ரத்தன் பண்டிட் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு அரசாங்கத்திற்குள் ஒரு அதிகார மையமாக செயல்பட முயன்றது கண்டனத்திற்குரியது. தேர்தல் காலத்தில் தவெக எம்எல்ஏக்களிடம் ஜாதகம் பெறப்பட்டு அதன் மூலமே வெற்றி பெற்றதாக சொல்வதெல்லாம் ஏற்புடையதல்ல.. தோல்வியடைந்தவர்களை பற்றி இந்த ஜோதிடக் கணக்கீடுகள் ஏன் பேசுவதில்லை?

ரத்தன் பண்டிட்டுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வழங்கப்பட்டது.. ஆனால், அந்த பொறுப்பையும் மீறி, அரசாங்கத்தையே தன் கட்டுப்பாட்டில் இயக்க முயன்றுள்ளார்..

இந்து சமய அறநிலையத்துறை

அதுமட்டுமல்ல, ரத்தன் பண்டிட், வேற்று மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவர்களைச் சந்தித்து, விஜய்யை முதலமைச்சராக்கியது தனது ஜாதகக் கணிப்புதான் என்று சொல்லி கொண்டு வருகிறாராம்.. அவர் தனக்கு தலைமைச் செயலகத்தில் கிடைத்த சிறிய ஜோதிட ஆலோசகர் பதவியை மீறி, ஒட்டுமொத்த அரசாங்கமும் தனக்குக் கீழ்தான் இயங்குகிறது என்ற தோற்றத்தை உருவாக்க முயன்றார். அதனால்தான் அவர் அந்தப் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார்.

ரத்தன் பண்டிட்டுக்கும் தவெக அரசுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. அவர் தலைமைச் செயலகத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட பிறகும் கூட, தனியாக அலுவலகம் அமைத்து தன்னை ஒரு அதிகார மையமாகக் காட்டிக் கொள்ள முயல்கிறார். ரகசியமாக சில எம்.எல்.ஏ.க்கள் அவரை சந்திப்பதாக தகவல்கள் வருகின்றன... ஆனால் ரத்தன் பண்டிட் விஷயத்தில் அரசு தெளிவாகவே உள்ளது.

அதன் பிறகும் ஊடகங்களுக்கு பணம் கொடுத்து பேட்டி அளிப்பதன் மூலமும், தன் தலைவரை பற்றித் தொடர்ந்து பேசுவதன் மூலமும் விளம்பரத்தைத் தேடிக்கொள்ள ரத்தன் பண்டிட் முயல்கிறார்.

ராஜ்மோகன், நிர்மல் குமார்

ஆனால் விஜய்யை அவ்வளவு எளிதில் ஏமாற்றிவிட முடியாது.. அவரைச் சுற்றியுள்ள சில நபர்களின் நடவடிக்கைகள் கட்சிக்கு ஆபத்தை விளைவிக்கலாம். சாதாரண மனிதனாக ஒருவருடைய வளர்ச்சியை பார்க்கும்போது, விஜய்யை சுற்றியுள்ள சில நபர்களின் நடவடிக்கைகளை குறித்தும் பேச வேண்டியிருக்கிறது.

குறிப்பாக, ரத்தன் பண்டிட்டை போலவே ஆதவ் அர்ஜுனாவும் எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டியவர் ஆவார். ஆதவ் அர்ஜுனாவின் கடந்த கால அரசியல் தடங்கள் மற்றும் எந்தக் கட்சியிடமும் உறுதியான விசுவாசம் காட்டாத போக்குகள் கவலை அளிக்கின்றன..

ஆனால், ராஜ்மோகன் அல்லது நிர்மல் குமார் போன்றவர்கள் அத்தகைய ஆபத்தை ஏற்படுத்துபவர்கள் கிடையாது. இதையெல்லாம் தவெக மீதான எச்சரிக்கை உணர்வுடனேயே விமர்சனமாக முன்வைக்கிறேன்.

ஆதவ் அர்ஜுனா ஆபத்து

உதாரணத்திற்கு ஆதவ் அர்ஜுனாவின் நடவடிக்கைகளை நாம் ஏன் கடுமையாக விமர்சிக்கிறோம் என்றால், அவருடைய பேச்சுக்கள் சில நேரங்களில் விஜய்க்கே எதிராக அமைந்துவிடுகின்றன. ரத்தன் பண்டிட்டைப் போல இவரும் ஒரு ஆபத்தான மனிதர் தான். ஆதவ் அர்ஜுனாவை விட்டு விலக்கினால் அது அரசுக்கு இன்னும் நல்லது."

தற்போதைய தவெக அரசாங்கத்தின் சில சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு மற்றும் நிர்வாகத் திறன் இன்னும் போதாது.. வரவிருக்கும் காலங்களில் அரசியல் சூழல் எத்தகைய மாற்றங்களைச் சந்திக்கப் போகிறது என்பதை நாம் அனைவரும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+