5 நாட்கள் பேங்க் லீவு? ரிசர்வ் வங்கி போட்ட புது உத்தரவு.. சண்டே வங்கிகள் செயல்படும்!
சென்னை: வருகிற செப்.26 முதல் செப்.30 வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும். எனவே இதை கணக்கில் கொண்டு பயனாளர்கள் அதேற்றவாறு திட்டமிட அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் செப்.27ம் தேதி.. அதாவது ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு யுனைடெட் போரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் இந்த மாத இறுதியில், 3 நாட்கள் ஸ்டிரைக் அறிவித்திருக்கிறது. அதைத்தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை வருவதால் மொத்தம் 5 நாட்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளன.

வழக்கமான வார இறுதி விடுமுறைகளும், ஸ்டிரைக்கும் அடுத்தடுத்த நாட்களில் வருகிறது. செப்.26 சனிக்கிழமையும், அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை வருகிறது. இதை தொடர்ந்து செப்.28ம் தேதி.. அதாவது திங்கட்கிழமை முதல் ஸ்டிரைக் தொடங்குகிறது. இது செப்.29, 30 என 3 நாட்களுக்கு நீடிக்கிறது. எனவே இந்த மாதம் கடைசியில் வங்கி வேலை இருக்கிறது எனில்.. அதை உடனே முடித்துவிடுங்கள்.
வங்கிகளின் நேரடி கிளைகள் அனைத்தும் இந்த 5 நாட்களும் முழுமையாக மூடப்பட்டிருக்கும். செக், நேரடி பணப்பரிமாற்றம், டிமாண்ட் டிராப்ட் எடுத்தல் மற்றும் கடன் தொடர்பான பணிகள் முற்றிலும் பாதிக்கப்படும். இந்த 5 நாட்களுக்கு ஏடிஎம் செயல்படும். ஆனால், பணம் காலியாகிவிட்டால் அது நிரப்பப்படாது.
இன்டெர்நெட் பேங்கிங், மொபைல் ஆப்ஸ் மற்றும் UPI பரிவர்த்தனைகள் வழங்கம்போல இயங்கும். எனவே இந்த நாட்களில் வங்கியை நம்பாமல் ஜிபே, போன்பே போன்ற பரிவர்த்தனை ஆப்கள் மூலம் பணத்தை மாற்றிக்கொள்வது சிறந்தது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா போன்ற முன்னணி வங்கிகள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளன. அவசரமான மற்றும் வங்கி கிளைகளுக்கு நேரடியாக சென்று செய்ய வேண்டிய பணிகளை ஸ்டிரைக் தொடங்குவதற்கு முன்பே அதாவது.. செப். 25 அன்றே முடித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை நோ லீவு
இருப்பினும் இந்த ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளும் திறந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து பொதுத்துறை மற்றும் ஊரக வங்கிகளும் வழக்கம்போல் செப்.27 அன்று திறந்து இரக்கம் என்று மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.
ஸ்டிரைக் காரணமாக 5 நாட்கள் வங்கிகள் தொடர்ந்து மூடப்படுவதால், பயனாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே பொதுமக்களின் அவசரத் தேவைகள் மற்றும் பணப்பரிவர்த்ததனைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று.. செப்.27 ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கி கிளைகள் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
