இரவோடு இரவாக இறங்கிய ரெடிமேட் கால்வாய்.. சாலைகளில் மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரம்! அதென்ன Precast?
சென்னை : சென்னை கோயம்பேடு - வடபழனி சாலையில் தேங்கி நின்ற மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் முயற்சிகளில் பெரிய பலன் கிட்டாத நிலையில், ரெடிமேட் கால்வாய்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
கனமழையால் சாலையில் தேங்கிய தண்ணீரை இரவோடு இரவாக அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 'ப்ரீகாஸ்ட்' எனப்படும் ரெடிமேட் கால்வாய்கள் கொண்டு வரப்பட்டு, சாலைகளின் நடுவே தோண்டப்பட்டு, கால்வாயை பொருத்தும் பணிகள் நடைபெற்றன.
மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக முடிவதற்குள் பருவமழை தீவிரமடைந்ததால், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் அதை அகற்ற ரெடிமேட் கால்வாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சாலைகளில் மழைநீர்
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையால், சென்னையின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எழும்பூர், நுங்கம்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, பாரிமுனை, வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அரசு நடவடிக்கை
பருவமழையை எதிர்கொள்ள அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு தண்ணீர் பெருமளவில் தேங்கிய இடங்களில் இந்தாண்டு தண்ணீர் தேங்காமல் தவிர்க்கப்பட்டுள்ளது. அதேசமயம், சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக முடிவடைவதற்குள் பருவமழை தொடங்கியதால், இன்னும் பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருக்கும் சூழல் நிலவுகிறது.

கோயம்பேடு - வடபழனி
சென்னை கோயம்பேட்டில் இருந்து வடபழனி செல்லும் 100 அடி சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த சாலையில் வெள்ள நீர் சூழ்ந்ததால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இரவோடு இரவாக தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மோட்டார்கள் வைத்து டிராக்டர்கள் மூலமாக தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ரெடிமேட் கால்வாய்
அந்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், ரெடிமேட் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. தண்ணீரை வெளியேற்ற முடியாத சூழல் நிலவும் பகுதிகளில் சாலைகளுக்கு நடுவே தோண்டி, ரெடிமேட் கால்வாய்களை பதித்து, இணைத்து, அதன் வழியாக தண்ணீரை வெளியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வடபழனி பகுதியில் ரெடிமேட் கால்வாய்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

ப்ரீகாஸ்ட்
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும், மழைநீர் வடிகால் கால்வாய்களை இணைக்கும் பணிகளையும் விரைந்து முடிக்க சென்னை மாநகராட்சி பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக ரெடிமேட் முறையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியையும் சென்னை மாநகராட்சி மேற்கொண்டது.

அவசர பணிகளுக்கு
ப்ரீகாஸ்ட் (precast) எனப்படும் கால்வாய் போன்ற ரெடிமேட் கட்டுமானத்தை பயன்படுத்தி குறைவான நேரத்தில் கால்வாய்களை அமைக்க முடியும். அவசரத் தேவையாக மழைநீர் வடிகால்களில் இணைப்பு வழங்கும் வகையில், சென்னையில் 34 இடங்களில், ரெடிமேட் கான்கிரீட் பயன்படுத்தி விரைந்து மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வந்தது. தற்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் இந்த ரெடிமேட் கால்வாய்களை பயன்படுத்தி, தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications