எந்த பேரிடரையும் எதிர்கொள்ளத் தயார்... உடனே திட்ட அறிக்கை தயார் செய்யுங்கள் - முதல்வர் ஸ்டாலின்
தமிழகம் முழுவதும் வெள்ள நீர் தேங்காமல் தடுப்பதற்கான திட்ட அறிக்கையை உடனடியாக தயார் செய்து அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்த போதிலும் பாதிப்பு என்பது குறைவாகவே ஏற்பட்டுள்ளது . இன்னொரு முறை இத்தகைய மழை பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டியது அவசியம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். வெள்ளநீர் தேங்காமல் தடுக்கும் வகையிலான திட்ட அறிக்கையை உடனே தயார் செய்ய வேண்டும் எனவும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழுவினருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்ற போது கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்தது. இதனால் முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
அதேசமயம் சமீபத்தில் பெய்த மழையால் , சென்னை உள்ளிட்ட பல நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
பருவமழையால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், அணைகள் நிரம்பி நீர் வெளியேற்றப்பகிறது.

மழை வெள்ள பாதிப்பு
இந்நிலையில், மழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிப்பதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அந்த வகையில், பாதிக்கப்பட்ட பகுதிக்கு முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் சென்று வெள்ள பாதிப்பை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

முதல்வர் ஆலோசனை
டிசம்பர் மாதத்தில் மீண்டும் பெருமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில்
சென்னையில் மழை நீர் தேங்குவதை தடுப்பது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான 18 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றனர்.

வரலாறு காணாத வெள்ளம்
அப்போது பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், வரலாறு காணாத மழை பெய்த போதிலும் பாதிப்பு என்பது குறைவாகவே ஏற்பட்டுள்ளது . எத்தகைய பேரிடையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம். கொரோனாவை கட்டுப்படுத்திய நிலையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இன்னொரு முறை இத்தகைய மழை பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டியது அவசியம்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம்
மழைநீர் தேங்கும் இடங்களில் அப்பகுதி மக்களின் வழிகாட்டுதல்களோடு இணைந்து அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். சென்னை தி.நகரில் வெள்ளம் தேங்கியதற்கும், தூத்துக்குடியில் வெள்ளம் தேங்கியதற்கும் காரணத்தை பார்த்தால் ஸ்மார்ட் சிட்டி திட்டம்தான் என்று அந்த பகுதி மக்களை குற்றம் சாட்டுகின்றனர்.
Recommended Video

திட்ட அறிக்கை
சென்னையில் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான வடிகால்கள் இல்லாததே மழை நீர் தேங்கியதற்கு காரணம். முந்தைய பாதிப்புகளை எதிர்வரும் ஆண்டுகளில் தடுத்துவிட்டோம் என்கிற பெயரை நாம் எடுத்தாக வேண்டும். எனவே நடைமுறை சாத்தியமுள்ள திட்ட அறிக்கையை தாருங்கள். காலம் தாழ்த்தாமல் உடனே திட்ட அறிக்கையை தயார் செய்ய வேண்டும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications