ரெட் அலர்ட் கொடுத்தும் சென்னையில் ஒரு சொட்டு மழை கூட இல்லை! தப்பிக்க பயன்படுத்தப்படுகிறதா RED ALERT?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கடந்த சனிக்கிழமை பரவலாக மழை பதிவாகியிருந்தது. பாரிமுனை பகுதியில் 30 செ.மீ வரை மழை பெய்திருந்தது. இப்படி இருக்கையில் ஞாயிற்றுக்கிழமை கனமழை கொட்டும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையை கொடுத்திருந்தது. ஆனால், மழை பெய்யவில்லை. எனவே வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு குறித்து பலரும் கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர்.

24 மணி நேரத்தில் 20 செ.மீக்கும் அதிகமாக மழை பெய்தால், பெய்ய வாய்ப்பு இருந்தால் ரெட் அலர்ட் கொடுக்கப்படும். சனிக்கிழமை 30 செ.மீக்கும் அதிகமாக மழை பதிவாகியிருந்தது. ஆனால் இவ்வளவு மழை பெய்யும் என்று வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக மறுநாள்.. அதாவது அக்.18ம் தேதி ரெட் அலர்ட் கொடுத்தது.

red alert

ரெட் அலர்ட் கொடுத்த நாளில்.. ஒரு சொட்டு மழைகூட பெய்யவில்லை என்பதுதான் ஹைலைட்! 100 சதவிகிதம் வானிலையை முன்கூட்டியே கணிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், மிதமான மழையா? அதி கனமழையா? என்பதை கூட வானிலை மையத்தால் சரியாக கணிக்க முடியாதா? என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். அதிலும் குறிப்பாக.. மழையை முன்கூட்டியே கணிக்க முடியாமல் தவறான அலர்ட் கொடுத்து தப்பித்துக்கொள்கிறதா வானிலை மையம்? என்றும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

மழை பெய்வது குறித்து அலர்ட் கொடுக்கவில்லை எனில் கேள்வி எழுப்புகிறார்கள். எனவே அலர்ட் கொடுத்துவிடுவோம்.. பெய்தாலும், பெய்யாவிட்டாலும் அது அப்புறம் உள்ள பிரச்சனை என்று ரெட் அலர்ட் கொடுக்கிறதா வானிலை மையம்? என்றும் கேள்விகள் எழுகின்றன.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், சென்னைக்குதான் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. ஆனால், கோயம்புத்தூரில் மழை வெளுத்து வாங்கியிருந்தது. கனமழை காரணமாக அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் ரோடு, நஞ்சுண்டாபுரம் சாலை, லங்கா கார்னர் என பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. ரயில்வே சுரங்கப்பாதைகளில் நீர் தேங்கி போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

பெரியநாயக்கன் பாளையம், தொண்டாமுத்தூர், வெள்ளானைப்பட்டி, போத்தனூர், மதுக்கரை மற்றும் ஈச்சனாரி போன்ற புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பதிவாகியிருக்கிறது. ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி கொண்டாட்டங்கள் காரணமாக நேற்றிரவு மக்கள் கோவை கடைத்தெருக்களை ஆக்கிரமித்திருந்தனர். ஆனால் கனமழை குறித்து முன்கூட்டியே எச்சரிக்காததால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+