சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூப்பர்ல.. அசைந்தாடிய தலைமுடி கூட கதை சொல்லியதே.. "திலகத்தின்" பெயர் சொல்லியதே.. எங்க நடிப்புக்காரன்

இன்று நடிகர் திலகத்தின் நினைவுநாளை ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்

Google Oneindia Tamil News

சென்னை: பிறவிக் கலைஞர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று.. காவிரி தந்த இந்த தலைமகனின் அசாத்தியங்களை நினைவுகூர்வதில் ஒன் இந்தியா தமிழ் பெருமை கொள்கிறது...!

"பராசக்தி" படத்திற்கு பிறகு ஒரு புல்லைபோல் பிரவேசிக்க தொடங்கினார் சிவாஜி கணேசன். அதற்கு பிறகு, இந்த அறிமுக - புதுமுக வெள்ளமானது தமிழகம் முழுவதும் ஊடுருவி கரைபுரண்டு பாய தொடங்கியது.

சூப்பர்..! 5 ஆண்டுகளுக்கு பின் ஜெயலலிதா இருந்த.. அதே அப்பல்லோவில் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய சசிகலாசூப்பர்..! 5 ஆண்டுகளுக்கு பின் ஜெயலலிதா இருந்த.. அதே அப்பல்லோவில் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய சசிகலா

தொய்வுடன் தொங்கி கொண்டிருந்த தமிழ்த்திரையுலகமானது, சிவாஜியின் வருகைக்கு பின்னர் கர்ஜித்து எழுந்து மிரட்டலுடன் ஓடத் தொடங்கியது... சிவாஜிக்கு முன்பு - சிவாஜிக்கு பின்பு - என திரையுலக கோட்டை கிழித்தும், பிரித்தும், வகுத்தும் காட்டியவர்..!!

 கருணாநிதி

கருணாநிதி

நடிப்பை ஒரு தொழிலாக இல்லாமல் தவமாக - ஏன் உயிர் மூச்சாக - ஏற்றுக் கொண்டு மதித்து போற்றியவர் சிவாஜி கணேசன்.,.. கலைஞர் கருணாநிதியுடன் இவருக்கிருந்த நட்பு அலாதியானது.. இவர்களின் புரிதல் ஆழமானது.. சிவாஜியை சினிமாவில் அறிமுகம் செய்ததிலும், ஹீரோவாக உயர்த்தியதிலும் கருணாநிதிக்கு தனி பெரும் பங்கு உண்டு என்பதை யாரும் மறுத்துவிட முடியாது..!

 ஆச்சரியம்

ஆச்சரியம்

சிவாஜி கணேசனுக்கு சின்ன வயசில், படிப்பு அவ்வளவாக ஏறவில்லை என்பார்கள்.. ஆனால் இவரிடம் இருக்கும் அந்த மனப்பாட பயிற்சியை எப்படி அவரது பள்ளி ஆசிரியர்கள் தவறவிட்டனர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.. எத்தனை பக்க வசனங்கள் இருந்தாலும், எத்தகைய தமிழாக இருந்தாலும், அவற்றை கொஞ்சம்கூட பிசிறில்லாமல், நூற்றுக்கு நூறு சதம் முழுமையாக ஒப்புவிக்கும் பேராற்றல்தான் சிவஜியின் முன்னேற்றத்தின் ஆகச்சிறந்த பலமாக இருந்திருக்கிறது..

படிப்பு

படிப்பு

இதை இன்னும் சுருக்கமாக சொன்னால், இப்போது கல்வி அமைப்பில் மாணவர்கள் உருப்போடுகிறார்களே, அந்த திறன்தான் இவடமும் இருந்திருக்கிறது. சிவாஜி கணேசன் மட்டும் உருப்போடும் திறனை, தன்னுடைய படிப்பில் செலுத்தியிருந்தால் 60'களிலேயே மிகச்சிறந்த கல்விமானாக திகழ்ந்திருப்பார்.

 ராணுவ வீரன்

ராணுவ வீரன்

சிவாஜியின் டிரஸ், மேக்கப் வைத்தே படத்தின் பெயர்களை எளிதாக சொல்லக்கூடிய அளவுக்கு மக்களின் மனதில் கரைந்து போயிருந்தார்.. அந்த படத்தின் கேரக்டரை பார்த்த உடனேயே அது என்ன படம் என்று சொல்லிவிடலாம்.. ராணுவ வீரனா, அது பதிபக்தி, தொழிலதிபரா அது 'பாசமலர்', இஸ்லாமிய இளைஞனா, அது 'பாவமன்னிப்பு', பணச்செருக்கு தந்தையா அது 'பார் மகளே பார்', பாதிரியார் உடையா, அது 'வெள்ளைரோஜா'.. இப்படித்தான் சிவாஜி, தன்னுடைய ரசிகர்களின் மனதில் பிரிக்க முடியாத அளவிற்கு படிந்து போனார்.

லிஸ்ட்

லிஸ்ட்

கேரக்டர்கள் மட்டுமில்லை.. அவரது நடையை மட்டுமே பிரித்து வகை வகையாக பேசலாம்.. "பார்த்தாலே பசி தீரும்" படம் முழுக்க தாங்கி தாங்கி நடக்கும் தன்னம்பிக்கை நடை, "திருவிளையாடல்" படத்தில் சிவபெருமானின் மிடுக்கு நடை, "போனால் போகட்டும் போடா" என்று அலட்சிய நடை, "பாகப்பிரிவினை"யில் தட்டு தடுமாறும் தளர்ந்த நடை, "ஆண்டவன் கட்டளை"யில் நம்பிக்கை நடை, "முதல் மரியாதை" படத்தில் கேஷூவல் நடை, "தேவர் மகன்" படத்தில் கம்பீர நடை என லிஸ்ட் போட்டுக் கொண்டே போகலாம்..

சிவாஜி

சிவாஜி

அட இவ்ளோ எதுக்கு? சிகரெட் பிடிக்கும்போதுகூட டிசைன் டிசைனா புகையை விட்டது நம்ம சிவாஜியாகத்தான் இருக்கும்.. அலட்சியத்துடன் சிகரெட் பிடிப்பது, சோகத்துடன் குழப்பத்துடன் சிகரெட் பிடிப்பது, ஆணவத்துடன் சிகரெட் பிடிப்பது, ஸ்டைலாக சிகரெட் பிடிப்பது, என ரக ரகமாக பிடித்து, சிகரெட் நெடியில் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்.

வாய்ப்பு

வாய்ப்பு

கட்டபொம்மனையோ, கர்ணனையோ, சிவபெருமானையோ நாம் யாரும் நேரில் பார்த்ததில்லை. அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்றுகூட நமக்கு தெரியாது? அதற்கு எந்தவித ஆதாரமும் இதுவரை இல்லை. அதற்கு இனியும் ஒருகாலும் வாய்ப்பும் இல்லை. ஆனால் நமக்கு சிவாஜி கணேசனை தெரியும். அவர்கள் எல்லாம் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.

 ஹீரோ

ஹீரோ

சிவாஜியிடம் பொதிந்திருந்த இன்னொரு மகத்தான விஷயம், ஒருநாள்கூட தன்னுடைய இமேஜ் பற்றி அவர் கவலைப்பட்டதே இல்லை.. ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கிட வேண்டும், எதையாவது சர்க்கஸ், சாகசங்கள் செய்து ஒரு "ஆல் டைம்" ஹீரோவாகவே உலா வரவேண்டும், கெத்து காட்ட வேண்டும், இப்படி யோசித்ததே கிடையாது.. அதேபோல, இன்னின்ன கேரக்டர்கள்தான் வேண்டும் என்று அடம்பிடித்ததும் கிடையாது.

 தலைமுடி

தலைமுடி

நல்லவனோ, கெட்டவனோ, கூனோ, குருடோ, நொண்டியோ, முடமோ, போலீஸோ, திருடனோ, எதுவானாலும் என்ன தயங்காமல் ஏற்று நிறைவாக நடித்து தந்த அசாத்திய திறமைசாலி.. ஒரு கலைஞன் எந்த கேரக்டர் தந்தாலும் அதனை கொஞ்சமும் தயங்காமல் ஏற்று செய்வதே நிஜமான கலைஞன் என்பதில் சிவாஜி கணேசன் பிடிவாதமாகவும் உறுதியாகவும் இருந்தார். அதனால்தான் அவரது தலைமுடி முதல் கால் விரல்நுனி வரை அனைத்துமே நமக்கு கதை சொல்லியது.

 கண்ணியம்

கண்ணியம்

இவர் வாய் திறந்து பேச வேண்டியதே இல்லை.. கணைக்கும் சிம்மக்குரலும், துடிக்கும் உதடுகளும், உயர்நோக்கும் புருவங்களும், விம்மும் கன்னங்களும் என ஒவ்வொரு அவயமும் நடிப்பை கொண்டு வந்து நம் கைகளில் அள்ளி தந்துவிட்டு, "இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?" என கேட்டுவிட்டு போகும். இது அவரது இறுதிகால கட்ட படங்களிலும் பளிச்சிட்டது. "முதல் மரியாதை"யில் ஆபாசமோ, விரசமோ இல்லாமல் கண்ணியத்துடன் உணர்ச்சிகளை வெளிப்படுத்த நம் சிவாஜிகணேசனை தவிர யாரால் முடியும்?

 அற்புத கலைஞன்

அற்புத கலைஞன்

உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட அற்புத கலைஞன்தான் சிவாஜிகணேசன்... எது நடிப்பு, எது இயல்பு என்று கடைசி வரை நமக்கு தெரியவே இல்லை.. எல்லாவித உணர்ச்சி குவியல்களை வெள்ளித்திரையில் கொட்டி வர்ண ஜாலம் செய்தவர் சிவாஜி கணேசன்.. இந்த பூமி பந்தில், மனித குலத்தின் கடைசி ரசிகன் உயிர்வாழும்வரை, சிவாஜி கணேசன் என்ற சகாப்தத்துக்கு மரணமுமில்லை.. காலமுமில்லை...!

English summary
Remembering the legendary actor Nadigar Thilagam Shivaji Ganesan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X