ராணி எலிசபெத்தே போய்ட்டாங்க.. இப்பயாவது கொடுங்களேன்! இங்கிலாந்திடம் கோரிக்கை வைக்கும் நெட்டிசன்கள்!
சென்னை : இங்கிலாந்தின் மிக நீண்ட காலமாக அதிகாரத்தை தனது கைக்குள் வைத்திருந்த இரண்டாவது எலிசபெத் மகாராணி உயிரிழந்த நிலையில் இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட கோஹினூர் வைரத்தை இப்போதாவது ஒப்படைக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இங்கிலாந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
உலக அளவில் மிக நீண்ட காலம் ஆட்சி நடத்தி சாதனை படைத்தவரான ராணி இரண்டாம் எலிசபெத் மறைவடைந்து இருக்கிறார்.
1952ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை என சுமார் 70 ஆண்டுகள் 200 நாட்கள் என இங்கிலாந்து அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது உலக அளவில் மிகப் பெரிய சாதனைதான்.

இரண்டாம் எலிசபெத்
உலகின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான அவர் மறைவடைந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் பலரும் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மதம் மொழி இனங்களைத் தாண்டி, ஒரு ராணியின் மறைவுக்கு காரணம் என்ன என வரலாற்றுப் பக்கங்களை அலசிய போது ஆப்பிரிக்காவின் காலனித்துவ அகற்றம், இங்கிலாந்தில் அதிகார பகிர்வு, ஐரோப்பு ஒன்றியத்தை உருவாக்கியது, அதிலிருந்து வெளியேறியது என பல அரசியல் மாற்றங்கள் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத்தின் காலத்தில் நடந்திருக்கிறது.

உலகின் மகாராணி
உலகின் மிகப்பெரிய பணக்கார மகாராணியாகவும் இவர் திகழ்ந்தார். கிட்டத்தட்ட 3400 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அவருக்கு இருந்தது. 33 நாடுகளின் நாணயங்களில் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபத்தின் முகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.அதே நேரத்தில் பல வரலாற்று கருப்பு பக்கங்களும் இவரது வாழ்வில் உள்ளது. இனவெறி சர்ச்சை, பல நாடுகளை இன்னும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என சர்ச்சைகள் சூழ்ந்தாலும் பலரும் தங்கள் ராணியாகவே இரண்டாம் எலிசபெத்தை கருதுகின்றனர்.

கோஹினூர் வைரம்
அவர் மரணம் அடைந்த நிலையில் பல நாடுகள் துக்கம் அனுஷ்டித்து வருகின்றன. இந்தியாவிலும் துக்க மனிஷிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவைச் சேர்ந்த பலரும் தற்போது சமூக வலைதளங்களில் இங்கிலாந்து அரசு குடும்பத்துக்கும் இங்கிலாந்து அரசுக்கும் ஒரு கோரிக்கையை விடுத்து வருகின்றனர். இந்தியாவின் விலை மதிக்க முடியாத சொத்துக்களில் ஒன்றான கோஹினூர் வைரம் குறித்த பேச்சுகள்தான் தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருக்கிறது.

கோரிக்கை
உலகின் மிகப் பழமையான விலை மதிக்க முடியாத கோகினூர் வைரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து இங்கிலாந்து அரச வம்சத்தின் வசம் சென்றது. 1800ஆம் ஆண்டுகளில் சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங் மற்றும் அவரது வாரிசுகளிடம் இருந்த போகினூர் வைரம் 1849ஆம் ஆண்டு பிரிட்டிஷார் படையெடுப்பின்போது கொள்ளையடிக்கப்பட்டு பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போதைய இங்கிலாந்து மகாராணியான விக்டோரியா இந்தியாவின் பேரரசியாக முடி சூட்டிக்கொண்ட போது கோஹினூர் வைரமும் அவரது வசம் சென்றது.

முடியுமா?
பலமுறை இந்திய அரசு முயற்சி செய்தும் கோஹினூர் வைரத்தை தற்போது வரை இந்தியா கொண்டுவர முடியவில்லை. இந்நிலையில் தற்போது இரண்டாம் எலிசபெத் உயிரிழந்த நிலையில் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடம் புதிய ராணியாக அறிவிக்கப்பட்டுள்ள கமிலா தலையை அலங்கரிக்க இருக்கிறது. இந்த நிலையில் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தை இங்கிலாந்து அரசு குடும்பமே வைத்துக் கொள்ளட்டும் கோஹினூர் வைரத்தையாவது எலிசபெத்தின் மறைவிற்குப் பிறகு இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பலரும் டுவிட்டரில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் அவ்வளவு சீக்கிரம் அது முடியாது எனவும் பலரும் கருத்திட்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications