"அது" மட்டும் நடந்தால் செக்ஸ் ஆர்வம் குறைந்துவிடுமா? ஆய்வுகள் என்ன சொல்கிறது? ஆண்களே உஷார்!
சென்னை: வயதானால் மனிதர்களின் பாலியல் செயல்பாடுகள் மற்றும் ஈடுபாடுகள் குறையும் என்று பலரும் சொல்வதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஒயின் போல மனிதர்களின் வாழ்விலும் நாட்கள் செல்ல செல்ல பாலியல் ஈடுபாடு மற்றும் ஆர்வம் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆண்களை பொறுத்த அளவில் 20 வயதிற்குள் அவர்கள் அதிக பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். அதன் பின்னர் உடலுறவில் இருக்கும் ஆபத்துகள் மற்றும் அது சார்ந்த பிரச்னைகள் குறித்த கவலைகள் அதிகமாகும். எனவே அவர்கள் செக்ஸில் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டத்தை இழக்க தொடங்குவார்கள். ஆனால், இவர்களின் ஆர்வம் குறைந்துவிட்டது என்பது இதன் அர்த்தமல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் வயதாக ஆக ஆண்களுக்கு விறைப்புத் தன்மை தொடங்கி பல்வேறு பிரச்னைகள் உருவாகும். இறுதியில் அதிக வயதில் குறைந்த செக்ஸ் மற்றும் அதிக பாலியல் பிரச்னைகளில் அவர்கள் சிக்கிக்கொள்வார்கள் என்கிறது ஆய்வு முடிவுகள். ஆனால் உடல் ஒத்துழைக்காவிட்டாலும் மனம் தன் போக்கில் போய்க்கொண்டேதான் இருக்கும். இதனால் உடலும் விரைவில் பழையபடி திரும்பும். இது குறித்து வெளிவந்துள்ள ஆய்வில் சொல்லப்பட்டுள்ளதாவது,

பாலியல் உச்சம்
"ஆண்கள் 20 வயதில் அதீத பாலியல் உச்சத்தை அடைவார்கள். ஆனால் குடும்ப பொறுப்புகள், கடன், குழந்தைகள் இவையெல்லாம் சேர்ந்து ஒரு அழுத்தத்தை உருவாக்கி அவர்களை பாலியல் பிரச்னைக்குள் தள்ளிவிடும். ஆனாலும் 20 வயதில் இருந்ததை போலவே 40 வயதிலும், 50 வயதிலும் இவர்கள் மீண்டும் பாலியல் உச்சத்தை எட்டுவார்கள். 60 வயதுக்கு பிறகுதான் இது சரியத் தொடங்கும். தங்கள் இணையுடன் வீட்டை பகிர்ந்துகொள்வது, உறுதியான உறவில் இருப்பது ஆகியவை பாலியல் திருப்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வயதாக வயதாக பொது ஆரோகியம் மற்றும் பாலுறவு திறன் மோசமடைந்தாலும் 30 வயதில் அனுபவித்த பாலியல் உச்சத்தை 50 வயதிலும் அனுபவிக்க முடியும்.

கவனம்
உடல் ஆரோக்கியமும், சிறப்பான வாழ்க்கை முறையும் கொண்டுள்ள ஆண்கள் பெண்களை விட அதிக அளவு செக்ஸில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். இந்த சுறுசுறுப்பு அவர்கள் வயதான பின்னரும் தொடர்கிறது. எதிர்பார்ப்புகளை தெரிவிப்பது உடலுறவில் ஏற்படும் சிக்கல்களை கையாள்வது போன்றவை வயது மூப்பின் அனுபவத்தால் ஆண்கள் பெறுகிறார்கள். இவைகள்தான செக்ஸில் ஆண்களை கில்லாடிகளாக மாற்றுகிறது. பெண்களை பொறுத்த அளவில் இதற்கு நேர் மாறாக இருக்கின்றனர். அவர்கள் இதில் அதிக கவனத்தை செலுத்துவதில்லை.

வயது
50 வயதில் இருக்கும் ஆண் குறைவான அளவு செக்ஸில் ஈடுபடலாம். ஆனால் அது பரிபூரணமாக இருக்கும். 20 வயதில் அவர்கள் அனுபவித்ததை 50 வயதிலும் அனுபவிப்பதை போல உணர்வார்கள். பாலியல் பிரச்னை என்பது வெளிப்படையாக பேச வேண்டியதாகும். ஏனெனில் இது நம்மை பற்றியது கிடையாது. நம்முடைய அடுத்த தலைமுறையை பற்றியது என்கிற உணர்வு நமக்கு முதலில் வர வேண்டும். சில குழந்தை பெற்றதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். ஆனால் குழந்தையை ஆரோக்கியமாக வளர்ப்பதற்கு நீங்கள் முதலில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

ஆய்வு
நம்முடைய ஆரோக்கியத்தில் செக்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். அப்போதுதான் நம்முடைய தலைமுறையினர் சிறப்பாக வளர்வார்கள். எனவே இதில் இருக்கும் பிரச்னைகளுக்கு சரியான தீர்வை காண மருத்துவர்களை அணுக வேண்டும்" என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications