அயர்ன் லெக் டூ கோல்டன் லக்.. சட்டென மாறிய ரோஜாவின் பயணம்.. இனி சினிமாவுக்கு நோ!
சென்னை: அமைச்சராக பதவியேற்ற நான் இனி சினிமாவிலோ, தொலைகாட்சி தொடர்களிலோ நடிக்க மாட்டேன் என நகரி எம்எல்ஏவும் சுற்றுலாத் துறை அமைச்சருமான நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, மம்மூட்டி என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் ரோஜா. இவர் பிஸியாக படங்களில் நடித்து பெரும் உச்சத்தை பெற்றவர்.
தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து முதலில் சிவப்பு கம்பள வரவேற்பு ரோஜாவுக்கு கொடுக்கப்பட்டது. இதையடுத்து இரு சட்டசபை தேர்தல்களில் தோல்வி அடைந்த நிலையில் அவருக்கான மவுசு குறைந்தது.

ஓரங்கட்டப்பட்ட ரோஜா
அவர் மெல்ல கட்சியிலிருந்து ஓரங்கட்டப்படும் நிலைக்கு வந்தார். அவர் அதிர்ஷ்டம் இல்லாதவர் என வெளிப்படையாகவே தெலுங்கு தேசம் கட்சியினர் பேசினர். இதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியில் இணைந்தார். இதையடுத்து முதல்முறையாக 2014 ஆம் ஆண்டு நகரி தொகுதியின் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 2019 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு முறை போட்டியிட்டு நகரி தொகுதியின் எம்எல்ஏவாக ரோஜா தேர்வானார்.

புதிதாக ஆட்சி
ஜெகன் மோகன் ரெட்டி புதிதாக ஆட்சி அமைத்த போது இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைச்சரவை மாறும் என தெரிவித்திருந்தார். அதன்படி கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து அமைச்சரவையை மாற்றினார். அதில் நடிகை ரோஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் அமைச்சராக நேற்று பதவியேற்றார்.

ஜெகனுக்கு நன்றி
பதவிப்பிரமாணம் முடிந்தவுடன் மேடையில் இருந்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் காலை தொட்டு வணங்கி தனது நன்றியை தெரிவித்தார். அதிர்ஷ்டம் இல்லாதவர் என தெலுங்கு தேசம் கட்சியால் ஓரங்கட்டப்பட்ட ரோஜா இனி சைரன் வைத்த காரில் வலம் வருவார். மேலும் கோல்டன் லக் என்ற பெயரையும் பெற்றார்.

அமைச்சர் ரோஜா
இதுகுறித்து அமைச்சர் ரோஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எனக்கு அமைச்சர் பதவி வழங்கிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எனது நன்றி. அமைச்சராவேன் என கனவிலும் நான் நினைக்கவில்லை. என் மீது முதல்வர் நம்பிக்கை வைத்து பதவியை வழங்கியுள்ளார். என் திறமையை நிச்சயம் நிரூபிப்பேன்.

இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்
இனி மக்கள் பணியாற்றவே நேரம் சரியாக இருக்கும். அமைச்சரானதால் கூடுதல் பொறுப்பும் உள்ளது. இதனால் இனி சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் நடிப்பதை நிறுத்திவிட முடிவு செய்துள்ளேன் என்றார் ரோஜா. இவர் அமைச்சரானதை ஒரு புறம் ரசிகர்கள் வரவேற்றாலும் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றதால் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications