சென்னையில் இன்று முதல் அமல்.. டாஸ்மாக்கில் காலி மதுபாட்டிலை கொடுத்தால் 10 ரூபாய் ரீஃபண்ட்
சென்னை: சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் இன்று (ஜனவரி 6) முதல் அமலுக்கு வருகிறது. காலி மது பாட்டில்களை அதே டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஒப்படைத்தால் ரூ. 10 திரும்ப வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. அதன்படி, மதுபாட்டில்களை வாங்கும்போது பத்து ரூபாய் கூடுதலாக கொடுத்து வாங்கிவிட்டு, காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும்போது 10 ரூபாயை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இந்தத் திட்டம் ஏற்கனவே நீலகிரி, கோவை, பெரம்பலூர், அரியலூர், நாகை, திருவாரூர், தருமபுரி, தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் அமலுக்கு வருகிறது. முதல்கட்டமாக சென்னையின் மூன்று முக்கிய பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை மத்தி ஆகிய பகுதிகளில் அமல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின்படி மதுப்பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கும் போது அதன் விலையுடன் கூடுதலாக பாட்டில் ஒன்றுக்கு ரூ. 10 வசூலிக்கப்படும். மது அருந்திய பிறகு காலி பாட்டில்களை அதே மதுபான விற்பனை நிலையத்திலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளிலோ ஒப்படைக்கலாம். பாட்டிலை ஒப்படைக்கும் போது ஏற்கனவே கூடுதல் தொகையாகச் செலுத்திய 10 ரூபாயை வாடிக்கையாளர்கள் உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
இது தொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், "டாஸ்மாக் லிட், சென்னை (வடக்கு, தெற்கு, மத்திய) மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் 06-01-2026 முதல் அமல்படத்தப்பட உள்ளது. வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அவற்றை மதுபானக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டத்தின்படி, மதுபாட்டில்களை வாங்கும் போது மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதலாக செலுத்தவேண்டும்.
மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களைத் திரும்ப அதே மதுபான விற்பனைக் கடையில் ஒப்படைக்கும் போது ஏற்கனவே செலுத்திய ரூ.10-ஐ திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் நோக்கம், காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதாகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு












Click it and Unblock the Notifications