ரூ.1000 வந்துருச்சா.. மகளிர் உரிமைத் தொகையை அட்வான்சாக கொடுத்த தமிழக அரசு! பொங்கலுக்கு டபுள் ஹேப்பி
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 இன்று முன் கூட்டியே பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது. 3 கட்டங்களாக மாநிலம் முழுவதும் விண்ணப்ப முகாம்கள் நடத்தப்பட்டன. அப்போது பெறப்பட்ட விண்ணப்பங்கள் அரசிடம் உள்ள தகவல் தரவு தளங்களில் இருக்கும் தகவல்களுடன் ஒப்பிடப்பட்டு சரிபார்க்கப்பட்டு பின்னர் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இப்படி விபரங்கள் சரிபார்க்கப்பட்டு விதிமுறைகளைப் பூர்த்தி செய்த ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் முதல் கட்ட பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். அரசாணையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. விண்ணப்ப முடிவு நிலை குறித்த மெசேஜ் விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மெசேஜ் வந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியது.
30 நாட்களுக்குள் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் தீர்வு கிடைக்கும் என அரசு அறிவித்தது. அதன்படி மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை பெற மேலும் ஆயிரக்கணக்கான குடும்பத் தலைவிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர். உரிமைத் தொகை பெற்றவர்களில் இறந்தவர்கள் மற்றும் தகுதியற்றவர்களாக கண்டறியப்பட்ட பெயர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, கள ஆய்வில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட மேல்முறையீட்டு விண்ணப்பங்களில் இருக்கும் குடும்பத் தலைவிகளின் விபரங்கள் உறுதி செய்யப்பட்டு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகின்றன.
மாதந்தோறும் 15 ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், பண்டிகை அல்லது வார விடுமுறை காலத்தில் முன்கூட்டியே உரிமைத் தொகையை தமிழ்நாடு அரசு பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைத்து வருகிறது. குறிப்பாக தீபாவளி பண்டிகையின்போதும் ஏழை எளிய மக்கள் தீபாவளிக்காக செலவு செய்வதற்கு முன் கூட்டியே மகளிர் உரிமைத் தொகை செலுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசு வழங்க உள்ள நிலையில், கூடுதல் மகிழ்ச்சி தரும் வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் முன்னதாக இன்றே மகளிரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருக்கிறது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications