SIP முதலீடு செய்யும் போது இதை மட்டும மறக்காம பண்ணுங்க.. லைப் முழுக்க கொண்டாட்டம் தான்!
இன்று நீங்கள் செய்யும் ஒரு சிறிய பழக்கம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் ஓய்வூதிய வாழ்க்கையை முழுமையாக மாற்றிவிடும் என்றால் உங்களால் நம்ப முடியுமா? இன்றைய இளம் தலைமுறையினர் அனைவரும் early retirement நோக்கி தான் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
இப்படி நீங்களும் முதலீடு செய்ய விரும்பினால் இதை மட்டும் மறக்காமல் செய்யுங்கள். லைப் முழுக்க கொண்டாட்டம் தான். இதற்காக நீங்கள் பெரும் தொகையை முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. மாதம் 5000 ரூபாய் முதலீடு செய்தாலே போதுமானது.

SIP முதலீடு புதிய உச்சம்
சமீபத்தில் வெளியான AMFI தரவுகளின்படி, மார்ச் 2026-ல் நாடு முழுவதும் SIP மூலம் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.32,087 கோடி என்ற அளவீட்டை எட்டியுள்ளது. இது இதுவரை இல்லாத உயர்வு. மக்கள் சந்தையின் ஏற்ற இறக்கத்தை பொருட்படுத்தாமல், எதிர்காலத்தில் உயருமா குறையுமான என்பதை யூகிக்க முயற்சிப்பதை விட்டுவிட்டு, ஒழுக்கமான மற்றும் தொடர்ச்சியான முதலீட்டைத் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதை இது காட்டுகிறது.
பெரும்பாலானோர் செய்யும் பெரிய தவறு
பலர் SIP தொடங்குகிறார்கள். ஆனால் வருமானம் உயர்ந்தாலும், பணவீக்கம் அதிகரித்தாலும் SIP தொகையை உயர்த்துவதில்லை. இதனால் நீண்டகாலத்தில் பெரிய இழப்பு ஏற்படுகிறது. பணவீக்கம் உங்களின் பர்சேசிங் பவரை குறைக்கும் போது, முதலீட்டை அதனுடன் உயர்த்தாவிட்டால் உங்கள் முதலீட்டு மதிப்பின் வளர்ச்சி குறைக்கும். இது முதலீடு செய்வோர் செய்யும் முக்கியமான தவறு.
5000 ரூபாய் போதும்
மாதம் ரூ.5,000 மட்டும் மியூச்சுவல் ஃபண்ட் SIP-இல் முதலீடு செய்தால், அது ரூ.1.76 கோடியாக வளரும். ஆனால் அதே தொகையை ஆண்டுக்கு வெறும் 2 சதவீதம் உயர்த்தி (Step-up SIP) முதலீடு செய்தால், அது ரூ.2.2 கோடியைத் தாண்டும். இது வெறும் கணக்கு அல்ல, நாம் செய்யும் சிறிய தவறின் மூலம் ஏற்படும் இழப்பு
ரூ.5,000 SIP vs 2% ஸ்டெப்-அப் SIP
இந்த 5000 ரூபாய் முதலீட்டை 12 சதவீத வருடாந்திர சராசரி வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில்:
வழக்கமான ரூ.5,000 மாத SIP-ஐ 10 ஆண்டுகள் தொடர்ந்தால் சுமார் ரூ.11.6 லட்சம் கிடைக்கும். அதே SIP-ஐ ஆண்டுக்கு 2 சதவீதம் உயர்த்தினால் ரூ.12.5 லட்சம் கிடைக்கும்.
20 ஆண்டுகளில் வழக்கமான SIP ரூ.50 லட்சம் அளிக்கும். ஸ்டெப்-அப் SIP ரூ.58 லட்சம் அளிக்கும்.
30 ஆண்டுகளில் வழக்கமான SIP ரூ.1.76 கோடியாக இருக்கும். ஆனால் ஸ்டெப்-அப் SIP ரூ.2.2 கோடியைத் தாண்டும்.
முதல் 10 ஆண்டுகளில் வித்தியாசம் சிறிதாகத் தெரியும். ஆனால் காலம் போக்கில் உங்கள் முதலீடு காம்பவுண்டிங் ஆகும் போது இறுதியில் பெரிய இழப்பு ஏற்பட்டு உள்ளதை காட்டும். கிட்டத்தட்ட 45 லட்சம் இழப்பு அதவும் வெறும் 2 சதவீத ஸ்டெப்-அப் இதுவே நீங்கள் 10 சதவீதம் ஸ்டெப்-அப் செய்தால் உங்களுடைய முதலீட்டு மதிப்பு 3.99 கோடி ரூபாயாக இருக்கும்.
காம்பவுண்டிங் ஒரு பெரும் சக்தி - ஸ்டெப்-அப் SIP-ன் மகத்துவம் இங்கேதான் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சற்று அதிகமாக முதலீடு செய்வதால், வருமானம் பெரிய அளவில் உயரும்.
சிறிய பழக்கம் - பெரிய பலன்
இந்த 2 சதவீத உயர்வு உங்கள் மாத செலவில் பெரிதாகத் தெரியாது. ஆனால் 20-30 ஆண்டுகளில் பல லட்சம் அல்லது கோடிகளை உங்கள் செல்வத்தில் சேர்க்கும். உங்களுடைய சம்பளம் உயரும் போது SIP-ஐ அதனுடன் உயர்த்துவது என்பது உங்கள் முதலீட்டு அடிப்படையை தொடர்ந்து விரிவுபடுத்த எளிதான வழியாக இருக்கும்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications