சென்னை அருகே ரூ.7 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பிடிபட்டது
சென்னை: சென்னை அருகே ரூ.7 கோடி மதிப்புள்ள 8 கிலோ போதை மாத்திரைகளை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பிடித்துள்ளனர். மியான்மரில் இருந்து கடத்திவரப்பட்ட மெத்தாம்பேட்டமைன் என்ற அந்த போதை மாத்திரைகள் மிகவும் ஆபத்தானவை ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞ 24.08.2021 அன்று சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு மண்டல அலுவலகத்திற்கு போதை மாத்திரை கடத்தி வரப்படுவதாக ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரகசிய தகவலின் படி சென்னையில் வாகன சோதனை நடத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் , சென்னை கர்னோடியா சுங்கச்சாவடி அருகே ஒரு கனரக வாகனத்தை மறித்து சோதனை நடத்தினர்.

8 தேநீர் பாக்கெட்டுகள்
வாகனத்தில் இருந்த மரப்பெட்டியில் இருந்து 8 தேநீர் பாக்கெட்டுகளை எடுத்துள்ளனர். அதற்குள் உயர்தர மெத்தாம்பேட்டமைன் என்ற போதை மாத்திரைகள் 8 கிலோ அளவிற்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

கவர்ச்சி பாக்கெட்டுகள்
அதாவது ஒவ்வொரு மஞ்சள் மற்றும் பச்சை வண்ண தேனீர் தூள் பாக்கெட்டிற்குள் 1 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட மெத்தாம்பேட்டமைன் மாத்திரைகள் அமுக்கி வைக்கப்பட்டிருந்தன. வெளிநாட்டு மொழி அடையாளத்துடன் அவை பேக் செய்யப்பட்டிருந்தன.

போதை மாத்திரை
8 கிலோ உயர்தர மெத்தாம்பேட்டமைன் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் வி.ஜகதீஸ்வரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில் , பிடிப்பட்ட வெள்ளை-படிக வடிவிலான மெத்தாம்பேட்டமைன் மாத்திரைகளை இந்திய-மியான்மர் எல்லையில் இருந்து சென்னையைச் சேர்ந்த எம்.மாரியப்பன் மற்றும் ஜி.ரமேஷ் ஆகிய இருவர் கடத்தி வந்தது தெரியவந்தது.

ஒப்புதல்
இதையடுத்து போதை பொருள் கடத்திய இருவரும் சென்னை மீஞ்சூர் டோல் பிளாசா அருகில் உள்ள டீக்கடையில் வைத்து எம்.மாரியப்பன் மற்றும் ஜி.ரமேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர், மியான்மரில் இருந்து மணிப்பூரை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூலம் போதைப்பொருளை வாங்கியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். அதை மினி லாரியில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.

என்ன பிரச்சனை
மெத்தாம்பேட்டமைன் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் ஆபத்தான தூண்டுதல் மருந்து. இது பார்ட்டிகளில் போதை மருந்தாக தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. மருந்தின் பக்க விளைவுகள் மிகவும் மோசமானவை. உடலுக்கு மிகவும் ஆபத்தானவை. தொடர்ச்சியாக மெத்தாம்பேட்டமைன் மாத்திரிகளை பயன்படுத்தினால் மாரடைப்பு, ஞாபக மறதி, மாயத்தோற்றம், வலிப்பு போன்ற இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்" இவ்வாறு அந்த அறிக்கையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறினர்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications