இது லிஸ்ட்லயே இல்லை.. ஆளுநர் டூ அரசியல்வாதி.. தமிழிசை சவுந்தரராஜன் பிளான்: ஆர்.எஸ்.பாரதி
சென்னை: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஆசை இருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
இதனால் தான் தமிழ்நாட்டில் தன் அரசியல் நிலைப்பாட்டைத் தக்க வைக்க தவறான பேட்டிகளைக் கொடுத்து வருவதாக விமர்சித்துள்ளார்.

"அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் கைகுலுக்கத் தெரிந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாரதியாருக்கு மரியாதை செலுத்த நேரமில்லையா" என தமிழிசை சவுந்தரராஜன் கேட்டதற்கு திமுக தரப்பில் ஆர்.எஸ்.பாரதி பெயரில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
அதில், தெலங்கானா மாநில ஆளுநராக இருக்கும் சகோதரி, தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு பேட்டி கொடுக்க வேண்டும் என்பதற்காக,எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஆசையை டெல்லி மேலிடத்திற்கு வெளிப்படுத்தும் விதமாக, தவறான பேட்டிகளைக் கொடுத்து, திராவிட முன்னேற்றக் கழக அரசைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழிசை சவுந்தரராஜன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக யூகங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் அதனை உறுதிபடுத்தும் வகையில் அறிக்கை விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.

தமிழிசை சவுந்தரராஜனை பொறுத்தவரை கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து களம் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தேர்தலில் தோல்வியை தழுவினாலும் கூட அவருக்கு ஆளுநர் பதவி வழங்கி கவுரவித்தது கட்சி மேலிடம்.
இந்நிலையில் அவர் மீண்டும் தேர்தல் அரசியலுக்கு திரும்புவாரா என்பது கேள்விக்குறிதான். இந்தச் சூழலில் தான் திமுக அமைப்புச் செயலாளர் இப்படியொரு அறிக்கை விடுத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications