சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிரடி.. திருவள்ளூரில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை ஏன் அனுமதிக்கல? டிஜிபிக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

Google Oneindia Tamil News

சென்னை : ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக திருவள்ளூர் காவல் துறையினர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு நீதிமன்ற ஆர்எஸ்எஸ் அமைப்பு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்திய சுதந்திர தின 75ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரப்பட்டது.

தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டதாகவும், அதன் மீது எந்த முடிவெடுக்கப்படாததால், அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை கிடையாது! உச்ச நீதிமன்றம் செல்லுங்கள்.. திருமாவளவன் வழக்கில் திட்டவட்டம்! ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை கிடையாது! உச்ச நீதிமன்றம் செல்லுங்கள்.. திருமாவளவன் வழக்கில் திட்டவட்டம்!

ஆர். எஸ்.எஸ்

ஆர். எஸ்.எஸ்

அந்த மனுவில், அணிவகுப்பு ஊர்வலத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே காவல்துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும், அனுமதி மறுக்க காவல்துறைக்கு அதிகாரமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஆர். எஸ்.எஸ். இயக்கத்தின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், ஆர்.எஸ்.எஸ். சீருடையுடன் பேண்டு வாத்தியம் முழங்க அணிவகுப்பு ஊர்வலம் செல்ல தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்பட்டது.

ஊர்வலத்திற்கு அனுமதி

ஊர்வலத்திற்கு அனுமதி

இந்த மனு நீதிபதி ஜி. கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் ஊர்வலத்தின் போது கோஷங்கள் எழுப்பக் கூடாது என்றும், காயம் ஏற்படுத்தும் வகையிலான எந்த பொருட்களுக்கும் அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

அனுமதி மறுப்பு

அனுமதி மறுப்பு

அணிவகுப்பு ஊர்வலத்திற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி கூறியிருந்தார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அணிவகுப்பு நடத்த அனுமதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும், அதற்கு திருவள்ளூர் மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக டிஜிபி உள்ளிட்டோருக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அவமதிப்பு நோட்டீஸ்

அவமதிப்பு நோட்டீஸ்

அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய விண்ணப்பம் திருவள்ளூர் போலீசாரால் நேற்று நிராகரிக்கப்பட்ட நிலையில், திருவள்ளூர் காவல் துறையினர், உள்துறை செயலாளர், டிஜிபி-க்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் தகுந்த விளக்கம் அளிக்கவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

English summary
RSS organization has sent contempt of court notice to Tiruvallur Police Department, Home Secretary, DGP regarding rejection of application seeking permission for RSS procession.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X