ஏய்.. இவன் ஏன் இங்க வந்து உக்காந்திருக்கான்.. ஜாலியா இருக்கே.. கலக்கறீங்களே சீக்கா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை விட படு கலாயாக இருக்கிறது கலகலப்பாக இருக்கிறது நம்ம ஸ்ரீகாந்த்தோட கிரிக்கெட் வர்ணனை.

கத்திப் பேசுகிறார்தான்.. காதெல்லாம் அடைக்கிறதுதான்.. ஆனாலும் ஜாலியா இருக்கு, கலகலப்பாக பேசுகிறார். புள்ளி விவரத்தை போகிற போக்கில் அள்ளி விடுகிறார். இடை இடையே ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலை சொல்லி விடுகிறார்.

இன்று இந்தியாவின் முதல் உலகக் கோப்பைப் போட்டி. தென் ஆப்பிரிக்காவுடன் போட்டி. இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா திணறிப் போனது. குறிப்பாக ஜஸ்பிரீத் பும்ராவின் அனல் வேகம் மற்றும் சஹலின் சுழல் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறிக் கிடக்கிறது தென் ஆப்பிரிக்கா.

கலக்கல் ஸ்ரீகாந்த்

கலக்கல் ஸ்ரீகாந்த்

மறுபக்கம் தமிழ் வர்ணனையில் பின்னிக் கொண்டிருந்தார் நம்ம சீகா.. அதாவது கிருஷ்ணமாச்சாரி சீகா. சும்மாவே அவர் காட்டு காட்டென்று காட்டுவார். கமெண்ட்ரி மைக்கை கொடுத்து விட்டால் சும்மா இருப்பாரா.. வாயாலேயே பின்னி எடுத்து விட்டார். வீரர்களின் பந்து வீச்சு குறித்து ஆக்ஷனோடு அவர் செய்த வர்ணனை செம.

பபுள் கம்முடன் சஹல்

பபுள் கம்முடன் சஹல்

ஒரு கட்டத்தில் அவர் சஹல் பந்து வீச்சு பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கேமரா பெவிலியன் பக்கம் திரும்பியது. அங்கே இந்திய வீரர்கள் பகுதியில் சஹல் அமைதியாக உட்கார்ந்து வாயில் பபுள் கம் மென்று கொண்டிருந்தார். அப்படியே ஷாக்காகி விட்டார் ஸ்ரீகாந்த்.

இவன் ஏன் இங்க இருக்கான்

இவன் ஏன் இங்க இருக்கான்

என்ன இது .. இவன் இங்க உக்காந்திருக்கான்.. பவுலிங் போடலையா.. ஓ ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து பவுலிங்கா... ஜாலியா இருக்கே என்று வியப்பு + ஜாலி கலந்து ஒரு கமெண்ட்டைப் போட்டு விட்டுப் போனார். உண்மைதான் ஸ்ரீகாந்த் காலத்தில் உள்ளே போய் விட்டால் வியர்த்து விறுவிறுத்து போட்டி முடிந்த பிறகுதான் வெளியே வர முடியும். அதனால் சஹல் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தது அவருக்கு ஆச்சரியமாக இருந்திருக்கலாம்.

விறுவிறுப்பு

விறுவிறுப்பு

போட்டியை விட படு விறுவிறுப்பு ஸ்ரீகாந்த் செய்த வர்ணனை என்பதில் சந்தேகமே இல்லை.. அவரது பேட்டிங் மாதிரியே துள்ளல் + எள்ளல்.. பின்றீங்கண்ணா!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+