Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனிக் கட்சி நடத்துனது போதும்! பாஜகவில் சேரும் சரத்குமார்? உண்மையா தலைவரே! பாஜக தலைவர் சொன்ன பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் தலைவருமான சரத்குமார் பாஜகவில் சேர இருப்பதாக கடந்த சில நாட்களாகவே யூகங்கள் பரவி வரும் நிலையில், அது குறித்து பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கரு நாகராஜன் விளக்கம் அளித்திருக்கிறார்.

சமத்துவ மக்கள் கட்சியை பொருத்தவரையில் தொய்வடையவில்லை. தேர்தலில் போட்டியிடுவதால் தங்கள் கையில் இருக்கும் பணத்தையும் இழக்க நேரிடும் என்பதால் கட்சி நிர்வாகிகள் தயங்குவதாகவும். இருப்பினும் மக்கள் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது என கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் அளித்த பேட்டியில் கூறியிருந்தார் சரத்குமார்.

உண்மையிலேயே அவர் கூறியது போல் தான் சமத்துவ மக்கள் கட்சியில் நடந்து வருகிறது. நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி தோல்வி என்றால் என்ன என்பது குறித்து சோதித்துப் பார்க்கக்கூட அவரது கட்சி ஆதரவாளர்கள் பெரிய அளவில் போட்டியிடவில்லை.

சரத்குமார்

சரத்குமார்

ஜெயலலிதா இருந்தபோது சரத்குமார் மட்டுமே எம்எல்ஏ ஆக முடிந்தது. அதன் பிறகு பல்வேறு தவறான அரசியல் முடிவுகளால், கூட்டணி குழப்பங்களால் சரத்குமாரால் அரசியலில் அவ்வளவாக ஜொலிக்க முடியவில்லை. கடந்த ஆண்டுகளை தீவிர திமுக ஆதரவாளராக இருந்து பின்னர் அதிமுக ஆதரவாளராகவும் இருந்த சரத்குமார் தற்பொழுது கட்சியில் இருக்கிறாரா இல்லையா என்பது கூட தெரியவில்லை என்கின்றனர் அவர் கட்சி தொண்டர்கள்.

அரசியல் - சினிமா

அரசியல் - சினிமா

அரசியல் கட்சி பணிகளுக்கு இடையேயும் திரை உலகை சரத்குமார் விட்டு வைக்கவில்லை. பல திரைப்படங்களில் பழைய ஆர்வத்துடனும் துடிப்புடனும் நடித்து வருகிறார். குறிப்பாக விரைவில் வெளியாக இருக்கும் மணிரத்தினம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சரத்குமார் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

பாஜகவில் இணைகிறார்?

பாஜகவில் இணைகிறார்?

அதாவது தனது கட்சியை பாஜகவுடன் இணைத்து விட்டு சரத்குமாரும் பாஜகவில் ஐக்கியமாக போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்காக பாஜகவில் இருக்கும் சரத்குமாரின் உறவினர் ஒருவர் தீவிர ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. கட்சியை பொறுத்தவரை பெரிய அளவிலான செல்வாக்கு இல்லை என்றாலும் தமிழகத்தின் பிரபலமான முகம் என்பதாலும் பெண்களுக்கு பிடித்த நடிகர் என்பதாலும் சரத்குமார் வருகையை பாஜகவினரும் ஆர்வத்தோடு எதிர்நோக்கி இருக்கின்றனர்.

உண்மை என்ன?

உண்மை என்ன?

அதே நேரத்தில் சரத்குமார் இது குறித்த வெளிப்படையான எந்த தகவலையும் கூறவில்லை. இந்த நிலையில் தான் அவர் குறித்த கருத்து ஒன்றினை பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் பாஜகவின் மாநிலத் துணைத் தலைவரான கரு.நாகராஜன் பேசி இருக்கிறார். இது தொடர்பாக ஊடகம் ஒன்றிடம் பேசிய கரு நாகராஜன் எத்தனையோ பேர் பாஜகவில் இணைத்திருக்கிறேன். எனது உறவுக்காரரான சரத்குமாருக்கு எப்போது உறுப்பினர் அட்டை கொடுக்கப் போகிறீர்கள் என பலரும் கேட்கின்றனர். சரத்குமார் பாஜகவுக்கு வந்தால் நிச்சயம் வரவேற்போம். அதே நேரத்தில் அவர் தனியாக கட்சி நடத்திக் கொண்டிருக்கும் போது தான் கருத்து ஏதும் சொல்ல முடியாது என கூறி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+