திமுக ஆட்சி சூப்பர்! மக்கள் அழைத்தால் நான் அரசியலுக்கு வருவேன்! லெஜெண்ட் சரவணன் பளிச்!
சென்னை: திமுக ஆட்சி சிறப்பாக உள்ளதாகவும் மக்கள் அழைத்தால் தாம் அரசியலுக்கு வருவேன் எனவும் தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் தெரிவித்துள்ளார்.
தனது அரசியல் வருகை குறித்து மக்களுக்கும், மகேசனுக்கும் தான் தெரியும் எனவும் அவர் பொடி வைத்துப் பேசியிருக்கிறார்.
லெஜெண்ட் சரவணன் பேசுவதை வைத்து பார்த்தால் விரைவில் அவர் அரசியலில் கால் தடம் பதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

லெஜெண்ட் சரவணன்
சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடித்ததன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்த தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் தொடர்ந்து நடிப்பேன் எனக் கூறி வரும் அவர், தனது அரசியல் ஆசை குறித்தும் மெல்ல பகிர்ந்துள்ளார். மக்கள் அழைத்தால் தாம் அரசியலுக்கு வருவேன் எனக் கூறி அரசியல் கட்சியினரை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

மக்கள் முடிவு
தாம் அரசியலுக்கு வருவதும் வராததும் மக்களும் மகேசனும் முடிவு செய்ய வேண்டிய ஒன்று என்றும் திமுக ஆட்சியை பொறுத்தவரை சிறப்பாக போய் கொண்டிருப்பதாகவும் புகழாரம் சூட்டினார். நடிப்பதை கைவிடப் போவதில்லை என்று கூறிய அவர் நல்ல கதைகளுக்காக பொறுமை காத்து வருவதாக தெரிவித்தார். தன் மீதான விமர்சனங்களை பற்றி அலட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து நடிப்பேன் என அவர் தில்லாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சொந்தக் கட்சி
லெஜெண்ட் சரவணன் ஒரு வேளை அரசியலுக்கு வந்தால் முக்கிய அரசியல் கட்சி ஏதேனும் ஒன்றில் இணைவாரா அல்லது தனியாக கட்சி தொடங்குவாரா என்ற கேள்வி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழில், விளம்பரம், நடிப்பு, என ஒவ்வொரு துறையாக கால் பதித்து வரும் லெஜெண்ட் சரவணன் அரசியல் கால் பதித்தாலும் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஏற்கனவே இவரை அரசியலுக்கு வருமாறு நாடார் சமுதாய பிரமுகர்கள் அழைப்பு விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

விரைவில் அறிவிப்பு
தனது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை மிக விரைவில் வெளியிடவுள்ளதாக லெஜெண்ட் சரவணன் கூறியிருக்கிறார். பேரன் பேத்தி எடுத்துவிட்ட நிலையிலும் 20 வயது இளைஞரை போல் மேக் அப் செய்து கொண்டு வலம் வருவது தான் அவரது சிறப்பாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications