சசிகலா நடிப்புக்கு ஆஸ்கார் தரலாம்... தமிழக மக்கள் விருது தரமாட்டார்கள் - ஜெயக்குமார்
யானை பலம் கொண்ட அதிமுகவை கொசு தாங்கிக்கொண்டிருப்பதாக கூறுவது நகைக்சுவையானது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: சசிகலாவின் நடிப்பிற்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம் என்றும் தமிழக மக்கள் விருது எதுவும் கொடுக்கப்போவதில்லை என்றும் முன்னாள் அமைச்சரும் அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான ஜெயக்குமார் கூறியுள்ளார். ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளதை ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
அதிமுக பொன்விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் சசிகலா. அதிமுக கொடி கட்டிய காரில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்த சசிகலாவிற்கு பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் உணர்ச்சிப் பொங்க வரவேற்பு அளித்தனர். சின்னம்மா வாழ்க என்ற முழக்கமிட்டனர்.
தொண்டர்கள் கூட்டத்திற்கு நடுவே வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் சசிகலா. அப்போது ஏராளமான தொண்டர்கள் அவரை நெகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஆஸ்கார் விருது
சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளதை முன்னாள் அமைச்சரும் அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சசிகலாவின் நடிப்பிற்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம் என்றும் தமிழக மக்கள் எந்த விருதும் சசிகலாவிற்கு தர மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அதிமுக என்ற யானை
அதிமுக என்ற இயக்கம் யானை பலம் கொண்டது. அத்தகைய யானை பலம் கொண்ட கட்சியை ஒரு கொசு தாங்குவதாக கூறுவது நகைச்சுவை என்று கூறிய ஜெயக்குமார், சசிகலா நினைப்பது எதுவும் நடக்கப் போவதில்லை என்றார்.

எப்போதும் இடமில்லை
ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா வந்தது ஒரு சாதாரண நிகழ்வு அதை பெரிது படுத்த வேண்டாம். ஊடகங்கள் ஈரைப்பேனாக்கி பேனை பெருமாளாக்க நினைக்க வேண்டாம். அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை அமமுகவில் இடம் தந்தால் ஆட்சேபனையில்லை

அதிமுக கொடி
அதிமுக கட்சிக்கொடியை பயன்படுத்த சசிகலாவிற்கு தார்மீக உரிமை கிடையாது என்று கூறிய ஜெயக்குமார்,
எந்தக்காலத்திலும் சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை என்றார். சசிகலாவினால் கட்சியில் எவ்வித பிளவையும் ஏற்படுத்த முடியாது என்று கூறினார்.
Recommended Video

தீயசக்தி
நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ஜெயலலிதா மட்டுமே அம்மா மற்றவரெல்லாம் சும்மா என்று தெரிவித்தார். அம்மா என்ற வார்த்தையை சசிகலா பயன்படுத்தக் கூடாது என்றும் கூறினார். தமிழகத்தில் இரண்டு தீய சக்திகள் உள்ளது ஒன்று திமுக மற்றொன்று சசிகலா என கூறிய அவர், அதிமுகவில் தொண்டர்கள் ஒன்றாக உள்ளனர், எந்த தீய சக்தியாலும் அதிமுக தொண்டர்களை பிரிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

பெரிய ஆளாக்க விரும்பவில்லை
சசிகலா இன்று அதிமுக கொடியை பயன்படுத்தியுள்ளார். அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படுமா என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமா, சசிகலாவை எதிர்த்து போராட்டம் செய்து அவரை பெரிய ஆளாக ஆக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications